Posts

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!     சட்டமன்றம் ஆச்சரியப்படுத்தும் பல அரசுகளை சந்தித்திருக்கிறது. வியக்க வைக்கும் பல விந்தையாளர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசு ஆச்சரியத்திற்குரியதும்   அல்ல. ஆளுகிற நானும் வியப்புக்குரியவனும் அல்ல.   அதிகார போதையோடு ஆங்காங்கே தென்படுபவர்களில் ஒருவன் தான் நான். தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யை உதிர்த்தேன். நல்லாட்சி தந்தவர்களை தீய சக்தி என்று கூறி நையப் புடைத்தேன்.     வேலையைக் காட்டியிருக்கிறேன் இவ்வாறெல்லாம். இவை எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள போகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லை. சர்கார்   சத்தியமாக இல்லை!     தேர்தல் நாட்களில் குட்டி கதைகளை அவிழ்த்து விட்டேன். காரணம் அவற்றை நான் மட்டுமே சொல்ல முடியும் என்பதனால் அல்ல. அவைகளைத் தான் ரீல்ஸ்க்குள் அடக்க முடியும் என்பதற்காக!     முந்தைய அரசு மீது அவதூறை அள்ளித் தெளித்தேன். எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக அல்ல , அவர்கள் மண்ணை கவ்விட வேண்டும் என்பதற்காக!   உனக்கு ஏன் இவ்வளவ...

எம். எல். ஏ. என்னும் ஏழைகள்!

 எம்எல்ஏ என்னும் ஏழைகள்! ஐயோ பாவக் கால்கள் கொண்டவர்கள், தொகுதி வலம் வர வழியற்ற வரியவர்கள், பல்லாயிரம் அடி நடந்து  பாதம் நொந்தவர்கள், நித்திரை வெறுத்து மக்களை நெருங்கிடும் நேசர்கள், கோரிக்கைகள் ஈடேற்ற குடிசைகளை அண்டிடும் அற்புதர்கள், அடிதடி தடுப்பதற்கு அன்பை ஏந்திச் செல்லும் அமைதியின் தூதுவர்கள், ஆற்றுப்படுகை பாதுகாக்க காற்று போல் சீறிப்பாயும்  சீமான்கள், திட்டங்களை நிறைவேற்ற வட்டமிட்டு சுற்றிச் சுழலும்  பூலோகத்துச் சூரர்கள், சட்டத்தை சமன்படுத்த சாரை சாரையாய் அணிவகுக்கும் சாரதிகள், இல்லாதோரை எட்டிப்பிடிக்க நில்லாது பாடுபடும் ஏழைப் பங்காளர்கள், சுயநலத்தை கரைத்து தொலைத்து  பொதுநலத்திற்காய் பயணப்படும் பங்காளிகள், வாக்குப்பெற்று இருந்தபோதிலும் வாடகை கட்டிட வக்கற்றிருக்கும் வானவர்கள், பாகுபாட்டை ஒழிப்பதற்கு மேடு பள்ளங்கள் ஏறி இறங்கும் மாமணிகள், தன்னிடம் இருப்பதை கொடுப்பதற்கு வேகமாய் விரைந்திடும் வில் அம்புகள், பட்டி தொட்டியில் வசித்து நகரம் வர பேருந்துக்காய் கால் கடுக்கும்  கனவான்கள், காணி நிலத்தையும் கொண்டிடாத சேவை ஞானி மனம் பெற்று இருக்கும் பெரும்புள்ளிகள், பஞ்...

மின்னொளிக்குள் தடம் பதித்த விண்வெளி!

 மின்னொளிக்குள் தடம் பதித்த விண்வெளி! விரல்கள் மட்டும் அல்ல விரிந்தினர்களும் பத்து! ஈன்ற பொழுதில் அல்ல இயன்ற பொழுதில், உற்ற அன்பில் பெற்ற பிள்ளைகளை நாடி வந்தன வானம்பாடிகள்! பல்வரிசை சிரிப்பில் மின்னொளி மின்னிட, பரிசு சீர்வரிசையின் பரிசல் மிதந்தது, அப்பப்பா அந்த இதயங்களின் இரைச்சலில் ஈகை புதிதாய் பிறந்தது! வேலூரில் போட்ட சுழி,  இடைப்பட்ட தூரம் கடந்து வடபழனியில் வட்டமானது! திட்டமோ மொட்டை மாடியில், குளிர்ந்த விட்டத்து மடியில், அன்பு சட்டமானது, இவர்களே உண்மை உறவுகள் என்று அந்த சென்னைக்கும் தோணுது! வலைதளம் பிரசவித்த பரிசுகள் அணிவகுத்தன, உடன் தந்த இனிப்புகளும் அடி நாக்கின் சுவை ஊட்டிகளை தீ மூட்டின! புதிய அரசுக்கோ  பதவிப்பிரமாணம், இன்பம் கூட்டி எங்கள் உள்ளங்கள் ஆனது ஆகாய விமானம்! ரகசிய காப்பை உரைத்தார் ஆளுநர், எங்களின் அதிசய நட்பை இணைத்தார் கடவுள் என்னும் வல்லுநர்! விஜய் ஆக்கப்பட்டார் முதல்வர், நாங்கள் ஒவ்வொருவரும் அன்றைய தினத்தின் புதல்வர்! அழைப்பினை விடுத்தோம், அன்பின் பாலத்தை வந்து சேர்ந்துவிட பணித்தோம், வேண்டுகோள் ஏற்கப்பட்டதில் தீர்க்கப்பட்டது, காத்திருப்பு கொண்டிருந்த இளகி...

மனம் ஆச்சி செய்த கன்னட மாநகராட்சி!

 மனமாச்சி செய்த கன்னட மாநகராச்சி! ஓரிடத்து உவகைக்காய் பேருந்து தேரெடுத்த ஈர் எட்டுகள், , சீறிப் பாய்ந்த வின் கொடியின் மொட்டுகள், ஆரார் சேர்ந்திட்டதும் சிரிப்பு வெடி வைத்தன, அந்த காவேரியை சுண்டி இழுத்தன! ஆனந்தம் ஆர்ப்பரிக்க உவகை பூ பறிப்பு நிகழ்ந்தது, அளுங்களே தாலாட்ட குளுங்களே களிப்பூட்ட பயணங்கள் நிகழ்ந்தது! கைகள் வடம்பிடிக்க உள்ளம் படமெடுக்க, நிம்மதி குடைபிடித்தது சிரிப்பின் சங்கதி பெருக்கெடுத்தது! பிஞ்சுகள் துள்ளிட நெஞ்சமோ நொடிகளிடம் கெஞ்சியது, நகரா நாட்களை உடுத்திட வேண்டுமென நகரும் நகரத்திடம் இறைஞ்சியது! உறவுகளின் அணைப்பிலும் இணைந்திட்ட விரல்களின் இனிப்பிலும் உணவுகளோ சுவைத்தன, உட்கொண்டதில் அல்ல அன்பு ஆட்கொண்டதில் எண்களின் இரைப்பைகள் நிறைந்தன! மஞ்சுவின் பேச்சைப்போல் வாகனத்தின் ஏசியும் சுட்டது, அத்துடன் ஓட்டெடுப்பை உடன் அமர்த்த மவுனமே மான்பரிந்து வழிவிட்டது! பண்நீர்கட்டாவும் பட்டாம்பூச்சியும் வெயில் தூவி வரவேற்க, பேட்டரி  உந்தும் மிருகங்களின் சிறைபட்ட பொந்தும் சாமரம் வீசியது, மகிழ்ச்சி கரைபுரள மனமன்ரோ கூசியது! லால்பாக்கில் ஷாக் காரணம் அரங்கேறியது இடைவிடாத வாக், ஆயினும் வாங்கி...

தாக்கப்பட்ட வாக்குகள்!

 தாக்கப்பட்ட வாக்குகள்!  வாக்குகளின் நிலை கவலைக்கிடம், நாக்குகள் கொண்டு மைய புடைக்கப்பட்டதால் இந்நிலை! துடைத்து எறியப்பட்டது கருப்பும் சிவப்பும், மடித்து ஊதப்பட்டது பிகிலும் திகிலும்! வலைதளத்தில் வலைவீசி பிடிக்கப்பட்டது, ஜனநாயக திமிங்கலம், கைகள் நெறி தவறி குளிக்கிட  உருப்பெற்றது அலங்கோலம்! இரட்டைக் குழல்கள் காதுகளில் ஊதிட, தணிக்கை செய்யும் எண்ணிக்கை கேட்டது, மத்திய கரை படிந்த மாளிகை! சிறுத்தைகளும் கருத்துகளும் விடுதலை வேண்டி விசும்பிட, மூச்சடைக்கும் நச்சுகளால் அம்பலப்பட்டது பின்புல சூட்சமம்! மூத்ததை இளையது தளபதியென விழ்த்திட, கண்ணியத்தின் திண்ணம்  தரைதட்ட மாரடைத்து வேர்த்தது! குழந்தை பேரம் மறைந்து குதிரை பேரம் தொடங்கியது, பதறும் பதவி சுகத்தில், தமிழ் கூறும் நல்லுலகு,  பிளவுகள் நேரும் பிடியை  அடைந்தது! வங்கத்தை வீழ்த்தி  கேரளத்தை தாழ்த்தி, தமிழின் நாட்டை வேட்டையாட தொடங்கிவிட்டது, எந்திர  மந்திரத்தின் தந்திரக் கூட்டணி! சாசனத்தை கூட  மாற்றிடும் ஆசனத்தை அடைந்திட, கழுகு சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறது திரைப் பறவை! புதைகுழி நோக்கி வாக்குகள் நகர்...

மழலை அரசியல்!

 மழலை அரசியல்!  ஊதிப் பெருக்கப்படுகிறது ஒரு புகழின் உச்சம்! ஊதுவதை வைத்து சாதிக்கும் திட்டம் போல! ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பதே  புதுமுழக்கம்! முழக்கத்தின் மயக்கத்தில் மூர்க்கத்தனமாகிவிடுகிறது முட்டாள்தனம்! ஓதாமல் கூட இருந்து  விடுங்கள் ஆனால் ஊதாமல் இருக்க வேண்டாம், சொல்லியபடி எதிரொலிக்கிறது அசுத்தங்களின் அலறல்! பால் மறவா பாலகர்களுக்கு பாலாடையில் ஊட்டப்பட்டது அபத்தத்தின் விஷம்! பந்தடிக்கும் கரங்கள் வாக்குச்சாவடிக்குள், பெற்றோரை சுண்டி இழுக்க,  சங்கினை ஊத  சாகடிக்கப்பட்டது  ஜனநாயகம்! யாரிடமும் சொல்லாமல் எடுக்கப்பட்ட ஜனநாயகன்  வெளிவந்தது, ஆனால் கூடி  கேட்டாலும் இனி கெடுக்கப்பட்ட ஜனநாயகம் வெளிப்படுவது  கடினம்! வலைதள திரையரங்கில் அரசியல் படப்பிடிப்பின் அரங்கேற்றம், தடையின்றி நடந்தது கரை மறந்து சுழன்றது! அலைகடலென இளைஞன் திரண்டானாம், ஆர்ப்பரிக்கும் வாக்களிப்பில் இரண்டற கலந்தானாம், எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் எண்ணப்படும் அவனின் வாக்குகளில் எண்கள் இருக்கும் இதயம் இருக்காது! தலைமுறை மட்டுமல்ல அவனின் இளையத்  தளபதியும் ஒரு இடைவேளை...

THE NUCLEAR MEN!

THE NUCLEAR MEN!   Henceforth stop accusing the nuclear: This component has been defamed as harmful, But must be respected for being natural, Until loaded into a murderous drizzle!   Doesn’t know the deepest drop: As long as being humanly mapped, To extinguish a racial group, For looting the resourceful hubs!   Being brought out by an enticing  woman: Forgets that to be enchained as a gunman, Takes pride in the weapon-driven famine But now the animal world has become a genuine human!   The balm cannot be blamed: When the Balmer plays a political game. Being impregnated with the fastest devastation, The thirsty blast turns into a vicious explosion!   The Nuclear can exist without the humanity: But with this only men can have a sovereign serenity, They accompany the balm to have an eternal calm, Tend to ignite a disruptive flame to earn a historical name!   Dr. U. Mahendran!

யுத்த தம்பட்டன்!

 யுத்த தம்பட்டன்! இரவுகள் உறங்க இவன் உளறல்கள் விழித்திருக்கும், அழிவின் கனவுகள் அந்த இரத்த விழிகளின் துயில் துடைக்கும்! கால் தூசுகளாம் நாடுகள் அவனுக்கு, நாவினால் வால் வீசுவதே அன்றாட இலக்கு! தேசபக்தி மருந்து கொடுத்து யுத்தம் தொடுத்தான், சத்தமின்றி தொழிலை பெருக்கி சொந்த முகத்திரை கிழித்தான்! உல் நாட்டு செழிப்பே அவன் முழக்கம், அண்டை நாட்டு தவிப்பில் இவனின் வல்லரசானது பிழைக்கும்! கடன்கள் பெற்ற தேசங்கள் இவனுக்கு அடிமை, பிணங்கள் தினம் விழுந்தாலும் பேசுவான் தர் பெருமை! கணக்கு போட்டே அவன் போற்கலம் புகுவான், இணங்கும் நாடுகளை இரையாக்கி மிகுவான்! அவன் மூளைக்குள் முன்னூறு சுரக்கும், நொடிக்கொன்று வெளிப்பட உலகமே கைகொட்டி சிரிக்கும்! அணி சேர்ந்த நாடுகளை தலை குனிய செய்வான், குனிந்த தலை நிமிரும் முன்னே கவிழ்ந்ததை கொய்வான்! சொன்னபடி நடக்க இவனின் விரல்கள் போடும் சொடுக்கு, கீழ்படியா தேசங்களை வேட்டையாடிடும் இவன் உத்தரவுகளோ கிறுக்கு! தீவுகளை இவனின் அதிகார பசி விழுங்கும், அடடா பராக்கிரமம் இதுவென்று ஊடகங்கள் முழங்கும்! கூட்டாளியை குளிர்விக்க மூளையை செலவிடுவான், உலக பாட்டாளிகள் மரணத்தை எமனாகி அளவிடுவான்! ம...

ஆண் மேகங்களின் ஆயுத மழை!

 ஆண் மேகங்களின் ஆயுத மழை! பகை ஏவி கருக்கும் போர் முகில், பலி கேட்கும்  துளிகளாய் குண்டு மழை! யுத்த முறையில் வீரம் நிரம்பிடும், ரத்த குலமாய் உயிர்கள் குவிந்திடும்! கனைக்கும் ஏவுகணையில்  கம்பீர  கர்ஜனை, அணைகட்ட முடியா நிலையில் மாண்டு சாயும் அப்பாவி சேனை! ஊரணியிலும் பதற்றம் சுரக்கும், உயிர் அணியை பிளந்து பின்னணி தோள்கள் பதக்கம் சுமக்கும்! கூட்டமாய் ஒதுங்கிட பதுங்கு குழிகளும் குலுங்கும், நீர்நிலை பிழைத்தலை விட உயிர் நிலை  காத்தல் கொடுமை என விளங்கும்! இடிமுழக்க குண்டுகள் விளையாடும், நொடி கடத்தும் சிசுக்களின் நடுக்கங்கள் உள்ளங்கையில் உயிர் பிடித்து அலரிடூம்! சதுப்பு நில தழுவலில்  நிறம் மாறும், தவிப்பு தரும் அழுகையும் விலகிப் போகும் தூரம்! பெண் உடலையே  வின் ஆயுதம்  வலை வீசும், போர்க்களை தான் இதுவென்று ஆதரவு தவக்கலைகள் பேசும்! விதவைகள் வர்க்கத்தை மேற்கத்திய ஆதிக்கம் கர்வத்துடன் அதிகரிக்கும், இரக்கமின்மை வெள்ளக் காட்டாராய் திசைகள் எங்கும் பெருக்கெடுக்கும்! நரகங்களாய்  நகரங்கள் நகரும், சிதறிய உதிரங்களோடு உறவாடும் உளவியல் மிரட்சிக் கதை கூறும்! ஆயிரம் மை...

வேண்டும் அறத்தின் சரத்து!

 வேண்டும் அறத்தின் சரத்து! சுயநல நாயகனும், சுமை விரும்பா பாலகனும் முடித்த மனம் விடுபட உண்டா தினம்! வாசலை தாண்டா கால்களும், பதுங்கி ஆள நினைக்கும் தேள்களும், வெட்கம் இன்றி சேர்ந்ததை விளக்கிட ஏது வழி! குழப்பிடும் கொடூர பேச்சும், அதற்கு முட்டுக் கொடுக்கும் இளைய மூச்சும், அருந்து பிரிய ஒரு  மருந்து உண்டா! கொள்கை உரைத்திடா கோஷத்தையும், அண்ணன்,  தாய் மாமா உறவு பேசும்  நாராசங்களின் நேசத்தையும், எரிக்கும்  நெருப்பு உண்டா! ஆளைக் கொல்லும் ஆபாச ஆளுமையும், அதன் காலைச்  சுற்றும் காலக்கொடுமையும்,  கசந்து இடம் புறம் செல்ல இருக்கிறதா பாதை! கணக்கு காட்டும் கூட்டமும், அங்கு சிலரின் கழுத்தை நெரிக்கும் திட்டமும், சட்டப்படி விலக மன்றமே நீதிக்காய் எங்கனம்  உன்னை அணுக! பொறுப்புகளை விரும்பா உயரமும்,  தடுப்புகளுக்குள் அடங்கா துயரமும்,  ஓரமாய் ஒதுங்கிட என்று சேரும் நல்ல நேரம்! பதவிக்காய் அண்டிய அவளும், பகட்டுக்காய் விஷக் கொடிவிடும்  இவனும், கட்சிக் கடை விரிக்காமல் மூக்கு உடைபட்டு நடையை கட்ட  வேண்டாமோ ரௌத்திரக்கொடை! லாட்டரி கூட்டாளியும்,  நீலாங்கரை ச...

அவள் உடல் அல்ல இதயம்

 அவள் உடலல்ல இதையம்! அவளை பார்க்க வேண்டாம் அப்படி மட்டும். நாளும் பொழுதும் இதையே செய்ய கூசவில்லையா? எப்படி? என்கிற எரிச்சல் கேள்வி வேண்டாம்! அப்பப்பா இப்படி என்று சொல்லுபடி இருந்ததில்லை! வீசிய பார்வைகளில் வெளிப்பட்ட விரோதங்களும் குரோதங்களும்! உங்களின் வக்கிரம் கொண்ட உக்கிர கண்கள், அவளுக்கு உடை உடல் என்கிற உருவகம் மட்டுமே கொடுத்தன! அவள் உறவாக இருப்பதை கருவாக பார்த்து கவிதை பாடி, நிலவாக பிரகாசிப்பதாய் அளவாக சுவைப்பதாய் நிலைபடுத்தும் நெருஞ்சி சொல் பேசி, முத்திரை குத்திடும் உங்களின் அந்தகத்தின் முகத்திரை இனியேனும் விலகட்டும்! அவள் அக்கா தங்கை என நா தடுக்கும் அடுக்கு மொழி உளறி, தாய்க்குலம் அவளின் உள்ளமோ போர்க்களம் என்று பிதற்றி, வெரிப்பதில் குட்டுடைந்து வெளிப்படுத்தும் ஈனச்செயல் இனி வேண்டாம்! அவள் கால்களில் கொளுசினை மட்டும் காணும் கயமைத்தனம் போதும், வளவி கொண்ட கைகளை அளந்திடும் அமானுஷ்ய அருவெறுப்பு யாதும், ஐயோ வேண்டாம் இனி, அவளின் ஆன்ம ஓசை அதனை கூர்ந்து கவனி! அவள் அழகாய் பொட்டு வைத்து, தொல்லைதரும் எட்டு மொழம் கட்டிவைத்து, வளம் வரும் சேலை சூடிய சோலை என்பதெல்லாம் பெண்ணுக்கு நிரந்தர வலை, என...

TALK TO ME IN BINDI!

TALK TO ME IN BINDI!   I  have an unheard language: Yet to be sociably dialogued Still vibrant even though being soliloquized More sweet, tender to be unhindered. Hush! Mine is not for an imposition! Purely liberated from north and south contention, Articulating my soul has been the intention, As precious and intimate as yours, As sensitive and evocative as you contain, As subtle and gentle as you retain!   Her Bindi  his Hindi are centred: The first is poised at the eyes culmination, The latter gets lifted amongst hoisted glorification! But Mine has been humble to sound simple, Untouched by fiscal recession to have commercial attention, Uncared within the collected spectrum to attract public syndromes, Unabsorbed within occupations to get dignified equations, Distanced from the mammoth rituals to experience an alienating duels, Kept away from the attire of politics for an oppressive attacks, Pushed into the incapability ho...

வல்லரசின் வெறியாட்டம்!

 வல்லரசின் வெறியாட்டம்! இதன் ஆட்டத்தை அளவிட அணுவுலை தேவை, மற்றவரின் நலன் என்பது இது போர்த்திய போர்வை! அரசியலாய் அறச் செயலற்று ஆடுதல் இதன் கலை, அதற்காய் எவர் தலைக்கும் வைத்திடும் விலை! தான் என்னும் அணுக்களை நிறைத்து போடும் ஆட்டம், தனக்கே எல்லாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும்! அழிவே இதன் உடம்பை வளர்க்கும் உணவு,  பிற நாட்டு நுழைவே வற்றிடா அன்றாட கனவு! ஏழை உற்பத்தி செய்யும் பண திமிர் தொழில்சாலையே இதன் கட்டமைப்பு, இதற்க்கு முதுகெலும்பு அற்று ஒத்தூதினால் அதுவே கூட்டமைப்பு! அறிவிப்பின்றி அரசுகள் மீது குண்டு வீசும், அது பராக்கிரமம் என்று இதன் கொத்தடிமைகள் கூச்சமின்றி பேசும்! ம்மனித உயிர்கள் இதற்க்கு பொருட்டல்ல, வெள்ளை மாளிகை செய்தால் எதுவும் திருட்டள்ள! நாடுகளும் ஏடுகளும் இதற்கு அடிமை, உலகத்து உடைமைகளை சுரண்டுவதே இதற்க்கு பெருமை! தன் நாட்டின்மேல் பட்டுவிடக் கூடாது சிறு கீறல், அதற்க்கு தான் பொழிகிறது இதர தேசங்களின் மேல் ஆயுத தூறல்! இது போட்டிடும் கணக்குகள் என்றுமே மலிவு, இதர நாடுகள் எல்லாம் இதன் வளர்ச்சியை சுமக்கும் இழிவு! தன் தேசத்திற்கு சுகாதார சட்டதிட்டம், மற்ற நாடுகளில் இதன் கழி...

THE ABLE AND DISABLE AUDITION!

THE ABLE AND DISABLE AUDITION!   The society conducts/participates, Unstoppably, irrationally, annoyingly, Unminding the days and nights, In the choosing and producing auditions, That of capable Ables and incapable Disables, Where juries are plenty to determine, How, and who should be disabled!   The judges are always preconceived: To judgmentally amplify the insufficiencies, Unchangeably produce the inequal indecencies, Primarily governed with noticeability, That have been loaded upon the bodies, The lack has been a trick being played out, To run the show of unsociable sociability!   The competition is methodologically so vigorous, To establish an abled identity, To ensure a fitness profundity. Discursively as a homogenised discourse. Serenity, beauty and agile performativity’s, have been disgustingly instructed, Are virtually showcased, exalted and constructed!   The fit and the unfit turn out to be a contagious r...

I AM NOT ALWAYS WHAT THEY ARE!

I AM NOT ALWAYS WHAT THEY ARE!   The title should have been: They are not always What I am, Let both be available at least, In my beautiful blind writing, As it is my world and my words. They are allowed generously by me, to read, re-read, prescribe and educationalize, but shouldn’t’ or mustn’t rewrite even a letter!   Don’t label my attempts: As a Poor blind’s ventilations or outpourings, Because I carry a rich darkness, Hidden profoundly inside me, You may not know it’s potential, As you rely upon the blaming brightness, I excavate words from the unfathomable bottom, Of the dazzling dimness and begetting blackness!   I had been given inadequate mentions, To render your body of letters pure. And told often my body is impure, Your letters and conscience are distanced from me, And have kept me below and behind you. And made me an entity of your beside and aside. I cannot and do not want your papers, To figure and trigger ...