தாக்கப்பட்ட வாக்குகள்!
தாக்கப்பட்ட வாக்குகள்!
வாக்குகளின் நிலை கவலைக்கிடம்,
நாக்குகள் கொண்டு மைய புடைக்கப்பட்டதால் இந்நிலை!
துடைத்து எறியப்பட்டது கருப்பும் சிவப்பும்,
மடித்து ஊதப்பட்டது பிகிலும் திகிலும்!
வலைதளத்தில் வலைவீசி பிடிக்கப்பட்டது,
ஜனநாயக திமிங்கலம்,
கைகள் நெறி தவறி குளிக்கிட உருப்பெற்றது அலங்கோலம்!
இரட்டைக் குழல்கள் காதுகளில் ஊதிட,
தணிக்கை செய்யும் எண்ணிக்கை கேட்டது,
மத்திய கரை படிந்த மாளிகை!
சிறுத்தைகளும் கருத்துகளும் விடுதலை வேண்டி விசும்பிட,
மூச்சடைக்கும் நச்சுகளால் அம்பலப்பட்டது பின்புல சூட்சமம்!
மூத்ததை இளையது தளபதியென விழ்த்திட,
கண்ணியத்தின் திண்ணம் தரைதட்ட மாரடைத்து வேர்த்தது!
குழந்தை பேரம் மறைந்து குதிரை பேரம் தொடங்கியது,
பதறும் பதவி சுகத்தில்,
தமிழ் கூறும் நல்லுலகு,
பிளவுகள் நேரும் பிடியை அடைந்தது!
வங்கத்தை வீழ்த்தி கேரளத்தை தாழ்த்தி,
தமிழின் நாட்டை வேட்டையாட தொடங்கிவிட்டது,
எந்திர மந்திரத்தின் தந்திரக் கூட்டணி!
சாசனத்தை கூட மாற்றிடும் ஆசனத்தை அடைந்திட,
கழுகு சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறது திரைப் பறவை!
புதைகுழி நோக்கி வாக்குகள் நகர்ந்திட,
பிழை மொழி பேசி தாக்குதல் பெருகிட,
பதைபதைப்பில் இருக்கிறது,
புள்ளிவிவரம் மொய்த்து கிடக்கும்,
ஜனங்களின் மனங்கள்!
அழுத குழந்தைகளுக்கு நாற்காலி பரிசளிக்க,
எதிரொளிப்பு எங்கெங்கும் கேட்கிறது,
ஐயோ வாழ்க்கையே சலிப்பில் துயர் பட்டு தோக்கிறது!
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment