தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

 தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!


அவரின் நகர்வலம் இல்லா வலைதளம் கிடையாது! 


ஒய்யார குதிரையில் நகர்ந்து ஒரு அங்குலத்தையும் அவர் விட்டதில்லை. 


விரட்டும் குதிரையை மிரட்டும் சாட்டைக்கு சமூக நீதி என்று பெயர். 


குதிரை அனுமதிக்காமல் அந்த சாட்டையும் இந்த ராஜாவும்,


ஒரு வேட்டைக்கும் போவதில்லை எந்த கோட்டையும் தாண்டுவதில்லை!


அவர் பொதுவாக வேட்டையாடுவது விளிம்பு நிலை உரிமைகளை தான்!


அந்தக் கோட்டினை  தாண்டுவது ஓட்டினால் வரும் வேட்டின் நினைவால் தான்!


சொல்லப்பட்ட விளிம்பு நிலையும்  அதன் ஓட்டும்,


அதிகார ராஜாவின் அங்கத்தை அதிகாரப்படுத்தும் இரண்டு கண்கள்!


மறக்க வேண்டாம் அந்த குதிரையின் கண் அசைவிற்கு,


அதிகாரத்தில் கண்களே அடங்கும் அந்த சமூக நீதி சாட்டையும் சத்தம் இன்றி இணங்கும்!


அவரின்  பாதப்படாமல் இந்த குதிரை பார்த்துக் கொள்வதே  தான் சேதப்படாமல் இருக்கத்தான்!


அந்த நான்கு கால் பல்லக்கு வெளிச்சப்பட்டு,


எல்லோரையும் நம்ப வைத்த விடியலை இருளாக்கியதே கல்வியின் காரிருளுக்கு காரணம்!


ஆனால் அந்த காரிருளோ  குறிப்பிட்ட இந்தக் காரியக்கார குதிரைக்கு,


வணிக அட்சய பாத்திரத்தை பரிசளித்த பேரருள்!


அந்த குதிரையின் ராஜபாட்டைக்கு,


அதில் சீறிப்பாய்ந்த படி அவர் பாடவிருக்கும் தப்புகள் பாட்டிற்கு,


அவரின்  மசோதா ஏட்டையும் அதற்கு பின்னிருக்கும் கள்ளக் கூட்டையும்,


எவரும் கட்டுடைக்க முடியாது அதைச் செய்பவர்களை,


அடுத்த நொடி கூட அவர்களால் விட்டு வைக்க முடியாது!


தனியார் குதிரையின் தந்திரத்தில் அவரே அமர்ந்தபின், 


இனியார் காப்பது இளைய தலைமுறையின் உயர் கல்வியை மீட்பது,


எனும் தோல்வியின் முணுமுணுப்பு கேட்பதை,


எப்படி ஐயா ஆங்காங்கே கைகட்டி வேடிக்கை பார்ப்பது!


ஏழை கல்வியை ஏற்றி வைக்கும் அட்சாரத்தை,


பணவெறி சல்லித்தனத்திற்கு பலி கொடுத்து,


எப்படி ஐயா முதுகெலும்பு உடைந்து தோற்பது!


ஆயிரம் உதவித்தொகையை ஒரு கையில் கொடுத்து, 


அதைத் தாங்கி இருக்கும் உயர்கல்வி உயிரையே எடுத்து, 


கெடு துரோகம் செய்யும் படு பாதக செயலை விடு போகட்டும், 


என்று கால் நடுங்க தலை கவிழ்ந்தா ஏற்பது!


தமிழ் மண்ணின் உயர்கல்வி உரிமையை விடாது அரசு என்று உதட்டு முரசு கொட்டி நாம் காத்திருந்தால்,


சுயமரியாதை சிரசை கொடுத்து விடுங்கள் என்று,


சம நீதி மறந்த தராசுகள் சூழ்ச்சியுடன் கேட்டால்,


தன்மானமே கரம் என கோர்த்து போராடி உரசாமல் எப்படி ஐயா பயந்து வேர்ப்பது!


இவன். 


முனைவர்.


உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!