Posts

அவர்கள் வெல்லட்டும்:

 அவர்கள் வெல்லட்டும்: மாண்புகள் தோற்று மரபுகள் காற்றில் பறந்தால்  என்ன அவர்கள் வெல்லட்டும்! சத்தியத்தின் நாமம்  சாகட்டும் சத்தியபாமா வெல்லட்டும்! மதுராந்தகம் அவர்கள் வசம்போகட்டும் ஜனநாயகம் நாசமாகட்டும் அனுதினமும் அது நடக்க அவர்களே வெல்லட்டும்! எந்திரப் பெட்டி வைத்து இங்கிதமாய் வெல்லட்டும்! ஓட்டுக்கு வேட்டுவைத்து ஞானேஸ் உடன்  கூட்டு வைத்து நயவஞ்சகமாக வெல்லட்டும்! புதிய மொந்தையில் பழைய கல் அதற்கென்ன பருகி பரவசமடைய அவர்களே    வெல்லட்டும்! சம்சாரமோ பிரச்சாரமோ  ஆசாரம் எதிலும் இல்லை இருந்தாலும் வெல்லட்டும்! கம்யூனிசமும் ஃபெமினிசமும் கரைய ஹீரோயிசம் நாட்டுக்கு தேவை ஆதலால்  வெல்லட்டும்! ஆதவ புரட்டும் நிர்மலின் உறுமலும் உரைக்கவில்லை எவருக்கும் அதனால் வெல்லட்டும்! அப்புறப்படுத்த ஒதுக்குப்புற குடிசைகள் காத்திருக்கின்றன அவர்களுக்கு அதனால் வெல்லட்டும்! அண்ணலும் பார்க்க அன்னியும் பார்க்க பட்டினப்பாக்கத்தில் சட்டத்தின் மன்றங்கள் தேவை அதனால் மன்மதமாக வெல்லட்டும்! வெயிலில் காய்ந்த தளபதியின் வியர்வைக்கு விருது வேண்டும் அதனால் வெட்கமே விக்கித்துப் போக  வெல்லட்டு...

திருச்சியின் மண்டாடிகள்:

 திருச்சியின் மண்டாடிகள்: பாய் மரம் இல்லை அங்கே செய்வரம் அரும்பியது!  போட்டியிடும் குயில்கள் அல்ல, திரண்டவை கூட்டினை நேசிக்கும் மயில்கள்! உரிமைக்குக் கொடி பிடிக்க, பாரம்பரிய நகர்விற்கு துடுப்பெடுக்க, கூடினர் ஒன்றாய் இனி இவற்றை யார் தடுக்க? கடல் இல்லா நகரத்தில் சங்க அலை அடித்தது, மாதரின் சமுத்திரம் என்பதான  சரித்திரம் அந்நிகழ்வு படைத்தது! மீன்களே மனமுவந்து அன்பு வலை விரித்தன, நாங்களும் வருகிறோம் என்று நேசங்களும் அதற்குள் சிறைப்பட்டுச் சிரித்தன! பூவையில் இருந்து பிரிந்த பாவைகள் போர்த்திய  மேடைச் சால்வையும் நம்பிக்கையின் வேள்விகள் ஆயின! அட ச்சே பெண்களா! என்றோரின் முன் முடிச்சிக்குள் நேயத்தின் பொருள் வைத்து, நாங்கள் திருச்சியின் பெண்கள் என அடடா!  உணர்ச்சியில் முழங்கினர்! ஈரைந்து, அத்துடன் ஈராறு தேர்ச்சியில் மூன்றிடம் பெற்ற தங்கைகள்,  முன்னோடிகளால் வியந்தோத பல கோடி பரிசு பெற்ற பூரிப்பினை எட்டினர்! அத்துடன் தாய் வீட்டிற்கே வந்த நினைவில் அன்றோ கூடினோர் கைகளையும் தட்டினர்! விழி இழந்த மாதருக்கு வழியில்லை எனும் பழி துடைக்க, தோன்றிய இல்லத்தில் உள்ளங்கள் அணிதிரண்டன, உவ...

மவுனித்த மானியம்:

மவுனித்த மானியம்: எத்துரையின் வித்தகராம். அத்துரையும் கொண்டவராம். நித்திரையின் நாயகராம். உத்தரவு உதட்டில் நின்று ஊனத்தோரை உதறியவராம்!  சித்திரையில் நடைபழகி சிம்மாசனம் சேர்ந்தவராம்! அங்கங்களின் அழகினால் ஆர்ப்பரிக்க வென்றவராம்! இதற்காக கட்சி கண்டு, அதற்காக சுற்றி வந்து, எதற்காகவும் அஞ்சிடாமல், குதர்க்க கதை உரைத்து, குழந்தை விரல் பிடித்து கோட்டை ஏறிய,  கோட் சூட் கதர் போட்ட கந்தகராம்! துறை பேசாத் தூயவராம் , குறையாவும் கரைந்தோடும், சொல் உரையாவும் இணக்கம் வழிந்தோடும், நயன்த நிர்வாகம் பயின்றவராம்! உடல் ஊனம் கொண்டவருக்காய், கடல் பார்க்க முதல்வர் கடை போடும் சேவக காவலராம்! தோஸ்தான வாஸ்து சொல்ல, ஆஸ்த்தான வஸ்தினாள்  அதிகாரம் வெல்ல, விழித்திரனற்ற  விளிம்பினோர் நெருங்கிடாமல்,  பத்தாவதுக்குள் பதுங்க போகும், பாமர துயருக்குள் பங்கெடுக்கும் பணிந்தவராம்! அவ்வைய்ந்தாண்டை அங்குலமாய் பிளந்தரிந்து, தன் காலத்தில் குறை கலைந்து, உடல் நலிந்த வரியவருக்கு வாழ்வளிக்க வந்தவராம்! ஏட்டுச் சுரக்காய் என்றறிந்த ஒன்றைக் கூட, பிறந்த கூட்டுக்குள்ளே குமுறிக் கிடக்கும் குறைபாடு கொண்டோருக்காய், மன்றத்தி...

பணிய வைத்த பனிச்சறுக்கு:

 பணிய வைத்த பனிச்சறுக்கு:   இறுக்கம்  உடைந்த இயற்கையின் பெருக்கம். தலை தெரிக்க விரைந்ததால் தரணியில் ஓர் நடுக்கம். பனியேறி இறங்கிட மலையேறின உயிர்கள். புரட்டிப் போட்டதில் புதைகுழி ஆயினவே  எழில்கள்! வேண்டியதோ நளினம் தீண்டியதோ மரணம். புனிதப் பயணம் அந்தப் புதிற்குள் சரிரச் சயனம். சுற்றிய உலாவில் வற்றியது நினைவு. மான்டோர் யாவரும்  உயிர் வேண்டோரின் கனவு! கூடிய ஆன்மாக்கள் பாரத்துடன் அகதிகளாக, அடைக்கலம் தந்தன  ஈரத்துடன் சகதிகள்! இமயத்தின் இறுதி  பல குருதிக்குள் குடியேறியது  மறதி! அன்றோ இயற்கையின் மடியில், இன்றோ அசைவற்று பூமிக்கு அடியில்! எல்லாம் ஒரு நொடியில் மொத்த உற்சாகமும் இருளின் பிடியில்! கலைத்தாடும் கவிந்தாயின் விளையாட்டு, இதற்கு கண்ணீருடன் கர்வமற்று கைதட்டு! உயர் மலை வாழ வழிகாட்டு, உன் பெயரின் சந்ததியை அப்படியே  நிலைநாட்டு! உடைத்துக் கொண்ட தேக்கம், மெல்லிய பணி என்றாலும் அதிர்ந்து தாக்கும்! சுயநல இன்பத்தின் ஏக்கம், சினந்த இயற்கையின் முன் அது தோற்கும். எத்தனை காலம் நம்மை அது பொறுக்கும், இமயத்திற்கும் மாரடைக்க இப்படித்தான் வியர்க்கும்! ஆற்றின்...

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!

பராசக்தி நடையில் ஒரு நடிக சிகாமணியின் சீற்றம்!     சட்டமன்றம் ஆச்சரியப்படுத்தும் பல அரசுகளை சந்தித்திருக்கிறது. வியக்க வைக்கும் பல விந்தையாளர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசு ஆச்சரியத்திற்குரியதும்   அல்ல. ஆளுகிற நானும் வியப்புக்குரியவனும் அல்ல.   அதிகார போதையோடு ஆங்காங்கே தென்படுபவர்களில் ஒருவன் தான் நான். தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யை உதிர்த்தேன். நல்லாட்சி தந்தவர்களை தீய சக்தி என்று கூறி நையப் புடைத்தேன்.     வேலையைக் காட்டியிருக்கிறேன் இவ்வாறெல்லாம். இவை எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள போகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லை. சர்கார்   சத்தியமாக இல்லை!     தேர்தல் நாட்களில் குட்டி கதைகளை அவிழ்த்து விட்டேன். காரணம் அவற்றை நான் மட்டுமே சொல்ல முடியும் என்பதனால் அல்ல. அவைகளைத் தான் ரீல்ஸ்க்குள் அடக்க முடியும் என்பதற்காக!     முந்தைய அரசு மீது அவதூறை அள்ளித் தெளித்தேன். எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காக அல்ல , அவர்கள் மண்ணை கவ்விட வேண்டும் என்பதற்காக!   உனக்கு ஏன் இவ்வளவ...

எம். எல். ஏ. என்னும் ஏழைகள்!

 எம்எல்ஏ என்னும் ஏழைகள்! ஐயோ பாவக் கால்கள் கொண்டவர்கள், தொகுதி வலம் வர வழியற்ற வரியவர்கள், பல்லாயிரம் அடி நடந்து  பாதம் நொந்தவர்கள், நித்திரை வெறுத்து மக்களை நெருங்கிடும் நேசர்கள், கோரிக்கைகள் ஈடேற்ற குடிசைகளை அண்டிடும் அற்புதர்கள், அடிதடி தடுப்பதற்கு அன்பை ஏந்திச் செல்லும் அமைதியின் தூதுவர்கள், ஆற்றுப்படுகை பாதுகாக்க காற்று போல் சீறிப்பாயும்  சீமான்கள், திட்டங்களை நிறைவேற்ற வட்டமிட்டு சுற்றிச் சுழலும்  பூலோகத்துச் சூரர்கள், சட்டத்தை சமன்படுத்த சாரை சாரையாய் அணிவகுக்கும் சாரதிகள், இல்லாதோரை எட்டிப்பிடிக்க நில்லாது பாடுபடும் ஏழைப் பங்காளர்கள், சுயநலத்தை கரைத்து தொலைத்து  பொதுநலத்திற்காய் பயணப்படும் பங்காளிகள், வாக்குப்பெற்று இருந்தபோதிலும் வாடகை கட்டிட வக்கற்றிருக்கும் வானவர்கள், பாகுபாட்டை ஒழிப்பதற்கு மேடு பள்ளங்கள் ஏறி இறங்கும் மாமணிகள், தன்னிடம் இருப்பதை கொடுப்பதற்கு வேகமாய் விரைந்திடும் வில் அம்புகள், பட்டி தொட்டியில் வசித்து நகரம் வர பேருந்துக்காய் கால் கடுக்கும்  கனவான்கள், காணி நிலத்தையும் கொண்டிடாத சேவை ஞானி மனம் பெற்று இருக்கும் பெரும்புள்ளிகள், பஞ்...

மின்னொளிக்குள் தடம் பதித்த விண்வெளி!

 மின்னொளிக்குள் தடம் பதித்த விண்வெளி! விரல்கள் மட்டும் அல்ல விரிந்தினர்களும் பத்து! ஈன்ற பொழுதில் அல்ல இயன்ற பொழுதில், உற்ற அன்பில் பெற்ற பிள்ளைகளை நாடி வந்தன வானம்பாடிகள்! பல்வரிசை சிரிப்பில் மின்னொளி மின்னிட, பரிசு சீர்வரிசையின் பரிசல் மிதந்தது, அப்பப்பா அந்த இதயங்களின் இரைச்சலில் ஈகை புதிதாய் பிறந்தது! வேலூரில் போட்ட சுழி,  இடைப்பட்ட தூரம் கடந்து வடபழனியில் வட்டமானது! திட்டமோ மொட்டை மாடியில், குளிர்ந்த விட்டத்து மடியில், அன்பு சட்டமானது, இவர்களே உண்மை உறவுகள் என்று அந்த சென்னைக்கும் தோணுது! வலைதளம் பிரசவித்த பரிசுகள் அணிவகுத்தன, உடன் தந்த இனிப்புகளும் அடி நாக்கின் சுவை ஊட்டிகளை தீ மூட்டின! புதிய அரசுக்கோ  பதவிப்பிரமாணம், இன்பம் கூட்டி எங்கள் உள்ளங்கள் ஆனது ஆகாய விமானம்! ரகசிய காப்பை உரைத்தார் ஆளுநர், எங்களின் அதிசய நட்பை இணைத்தார் கடவுள் என்னும் வல்லுநர்! விஜய் ஆக்கப்பட்டார் முதல்வர், நாங்கள் ஒவ்வொருவரும் அன்றைய தினத்தின் புதல்வர்! அழைப்பினை விடுத்தோம், அன்பின் பாலத்தை வந்து சேர்ந்துவிட பணித்தோம், வேண்டுகோள் ஏற்கப்பட்டதில் தீர்க்கப்பட்டது, காத்திருப்பு கொண்டிருந்த இளகி...