மழலை அரசியல்!
மழலை அரசியல்! ஊதிப் பெருக்கப்படுகிறது ஒரு புகழின் உச்சம்! ஊதுவதை வைத்து சாதிக்கும் திட்டம் போல! ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பதே புதுமுழக்கம்! முழக்கத்தின் மயக்கத்தில் மூர்க்கத்தனமாகிவிடுகிறது முட்டாள்தனம்! ஓதாமல் கூட இருந்து விடுங்கள் ஆனால் ஊதாமல் இருக்க வேண்டாம், சொல்லியபடி எதிரொலிக்கிறது அசுத்தங்களின் அலறல்! பால் மறவா பாலகர்களுக்கு பாலாடையில் ஊட்டப்பட்டது அபத்தத்தின் விஷம்! பந்தடிக்கும் கரங்கள் வாக்குச்சாவடிக்குள், பெற்றோரை சுண்டி இழுக்க, சங்கினை ஊத சாகடிக்கப்பட்டது ஜனநாயகம்! யாரிடமும் சொல்லாமல் எடுக்கப்பட்ட ஜனநாயகன் வெளிவந்தது, ஆனால் கூடி கேட்டாலும் இனி கெடுக்கப்பட்ட ஜனநாயகம் வெளிப்படுவது கடினம்! வலைதள திரையரங்கில் அரசியல் படப்பிடிப்பின் அரங்கேற்றம், தடையின்றி நடந்தது கரை மறந்து சுழன்றது! அலைகடலென இளைஞன் திரண்டானாம், ஆர்ப்பரிக்கும் வாக்களிப்பில் இரண்டற கலந்தானாம், எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் எண்ணப்படும் அவனின் வாக்குகளில் எண்கள் இருக்கும் இதயம் இருக்காது! தலைமுறை மட்டுமல்ல அவனின் இளையத் தளபதியும் ஒரு இடைவேளை...