ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!
ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!
அவை ஒரு கூட்டினை கட்டின.
எங்கெங்கோ ஓடி சென்று சேகரித்த தேன் துளிகள் அதில் வைக்கப்பட்டன.
தூரத்து வேடனுக்கு அவை கண்ணை உறுத்திக் கொண்டே இருந்ததை அவை அறிந்திருக்கவில்லை.
இதற்கு தேன் சேகரிப்பு மற்றும் கூட்டை கட்டுதல் என்பதாக இருந்த தேனீக்களை நீங்கள் குறை சொல்ல முடியாது.
ஒருவேளை நீங்கள் குறை சொல்ல முடிவு எடுத்து விட்டால் உங்களால் சேகரிக்கப்பட்ட தேன் துளிகளையும், அவை பொதுப்படையாய் குவித்து வைக்கப்பட்டதையும்,
ஏதோ ஒரு அபகரிப்பாலும் தாரை பார்ப்பாலும் நீங்கள் இழக்க நேரிட்டதை நினைத்துக் கொள்ளுங்கள்!
கள் எரிபவர்கள் கவனமாக கண்ணிவைத்துக் காத்திருந்தனர்.
அவர்கள் காத்திருப்புக்கு பலம் சேர்க்க அந்தக் கூட்டத்தில் இருந்த தேனீக்களில் ஒன்று,
கல் எரியும் கூட்டத்தை அடைந்து தேன் சொற்களை எறிய உதவியது!
அந்தத் தேனியிடம் கற்களை கொடுத்துவிட்டு எரியும் எட்டப்பன்கள் எட்டி நின்றனர்!
அந்த எட்டப்பன்கள் இடம் ஏராளமான கற்கள் இருந்தன.
இந்த தேனீக்களை போன்று இருந்த மற்ற தேனீக்களுக்கும் தேவைப்படும் அளவிற்கு,
கற்களை கணிசமாய் குவித்து வைத்து காயப்படுத்தும் வாய்ப்புக்காக காத்தே கிடந்தன!
நமக்கு பிடிக்கவில்லையா பலம் கொண்டு தாக்கு,
என்பதே அவைகளுக்கு பொழுதுபோக்கு!
கயவர்களின் கல்லினைப் பார்த்து வியந்து போன அந்தப் பெரிய தேனி,
காயப்பட்டவர்களிடம் கனந்துக் கொண்டிருக்கும் நியாயத்தை கண்டுகொள்ள தயாராக இல்லை,
ஒருவிதத்தில் நியாயத்தின் சாயல் கூட தெரியாத கூழாங்கல் கூட்டத்திடம் அதை எதிர்பார்ப்பதும் தவறுதான்!
இப்பொழுது அந்தக் கற்களையும் பெரிய தேனியையும் பிரித்தெடுக்க முடியாது.
கல் எரியும் போலி பலம் கொண்டு தூபம் போடப்பட்டிருப்பதே அதற்கு காரணம்!
தேன்கூடு கட்டப்பட்ட மரம் இங்கே யாருக்கும் சொந்தமில்லை.
ஆனால் இங்கே தேனீக்களின் உழைப்பும் சேகரிக்கும் போது ஏற்பட்ட உணர்வும்,
கல்லடிப்பட்டதை தான் ஜீரணித்துக் கொண்டு மௌனித்து இருக்க முடியவில்லை!
அந்த மரத்திற்கு ஆசைப்படும் சில தேன் கூடு அழிக்கும் கோழைகள்,
மறைந்தே இருக்க மட்டுமே முடிகிறது,
அப்படித்தானே இருக்க முடியும் கணக்கற்ற துரோக கற்கள் வைத்திருக்கும் பாகற்காய்களால்!
அதுபோல் அவர்கள் ஒன்றும் நேர்பட நிற்கும் போர்படையினர் அல்லவே,
மற்றவரும் மற்றவையும் பாழ்படுவதைக் கண்டு,
நாள்பட நயவஞ்சக சிரிப்பு உதிர்த்து கிடக்கும்,
நாரத முனிவரையே நடுநடுங்க செய்யும் சாரதிகள் தானே!
அவர்களோ அந்த தேனீக்களின் கூட்டினை திருடி இருக்கலாம்,
அவை தேன் எடுக்க கொண்டிருக்கும் நாட்டத்தினை,
தீண்டவோ விருப்பப்படி சீண்டவோ முடியாததால்,
தேள் கொட்டியது போல் விஷமித்து கிடக்கின்றன அந்த கல் கூட்டத்தினர்!
இவன்.
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment