மின்னொளிக்குள் தடம் பதித்த விண்வெளி!

 மின்னொளிக்குள் தடம் பதித்த விண்வெளி!



விரல்கள் மட்டும் அல்ல விரிந்தினர்களும் பத்து!


ஈன்ற பொழுதில் அல்ல இயன்ற பொழுதில்,


உற்ற அன்பில் பெற்ற பிள்ளைகளை நாடி வந்தன வானம்பாடிகள்!


பல்வரிசை சிரிப்பில் மின்னொளி மின்னிட,


பரிசு சீர்வரிசையின் பரிசல் மிதந்தது,


அப்பப்பா அந்த இதயங்களின் இரைச்சலில் ஈகை புதிதாய் பிறந்தது!


வேலூரில் போட்ட சுழி, 


இடைப்பட்ட தூரம் கடந்து வடபழனியில் வட்டமானது!


திட்டமோ மொட்டை மாடியில்,


குளிர்ந்த விட்டத்து மடியில்,


அன்பு சட்டமானது,


இவர்களே உண்மை உறவுகள் என்று அந்த சென்னைக்கும் தோணுது!


வலைதளம் பிரசவித்த பரிசுகள் அணிவகுத்தன,


உடன் தந்த இனிப்புகளும் அடி நாக்கின் சுவை ஊட்டிகளை தீ மூட்டின!


புதிய அரசுக்கோ  பதவிப்பிரமாணம்,


இன்பம் கூட்டி எங்கள் உள்ளங்கள் ஆனது ஆகாய விமானம்!


ரகசிய காப்பை உரைத்தார் ஆளுநர்,


எங்களின் அதிசய நட்பை இணைத்தார் கடவுள் என்னும் வல்லுநர்!


விஜய் ஆக்கப்பட்டார் முதல்வர்,


நாங்கள் ஒவ்வொருவரும் அன்றைய தினத்தின் புதல்வர்!


அழைப்பினை விடுத்தோம்,


அன்பின் பாலத்தை வந்து சேர்ந்துவிட பணித்தோம்,


வேண்டுகோள் ஏற்கப்பட்டதில் தீர்க்கப்பட்டது,


காத்திருப்பு கொண்டிருந்த இளகிய படபடப்பு!


ஆண்டின் பாதியோ அசைவின்றி நின்றது!,


கூடி விருந்துண்ட கணத்தில் அறுசுவையோ மதி மயங்கி தேவலோகம் சென்றது!


தாய் யார் செய் யாரோ என்கிற அங்கலாய்ப்புகள்,


ஆங்காங்கே தொட்டுவிடும் படி  கிடந்தன,


இவருக்கு இவர் என போட்டு உடைத்திட,


மல்லிகைக்கு சவால் விட்டு உறவுகள் மனம் வீசி உள்ளங்களை நிறைத்தன!


பெற்றோர் பெற்றவை  குறித்து சிற்றுரையாற்றிட,


ஒன்றரை மணியும் உற்சாக தண்டுரா போட்டது,


யார் யார் என்ன பேசுகிறோம் என்பதனை பகல் நேரத்தில் நிலவு,


சுவர்களின் மேல் நட்சத்திர காது வைத்து கேட்டது!


நிலா சோறு போல  விரவிக்  கிடந்த அன்புப் பண்டங்களை ,


நூறுக்கும்  மேற்பட்ட விரல்கள் வருடிட,


இதனை கண்டிட்ட காற்று கொண்டிட்ட கோபத்தில்,


நம் மகிழ்ச்சி எனும் தென்றல் பிறந்தது,


அதில் தேகங்கள் ஊட்டிப்பணியாய் சில்லிட்டு குளிர்ந்தது!


முற்றுப்பெற உற்சாகம் எங்களைச் சுற்றிவர,


சீட்டுகள் மீண்டும் குலுங்கின,


அப்பப்பா இது எப்ப வரும் என்று அந்திவானின் உதடுகள் முனங்கின,


அவை கொண்டு வரப்போகும் இன்பத்தை நினைத்து உறவுகள் ஆறுதலில் மயங்கின!


தம்பியும் அவனின் தங்கையும் பொம்மையும் புதுமையும் வைத்து விளையாடிட,


கரைபுரண்ட இன்பம்,


திரண்ட அன்பினருக்கு களிப்பினை  கொடுத்தது,


அவரவர் இடம் செல்லும் எண்ணம்தான் இடையில் பாய்ந்து தடுத்தது!


அன்புடன்,


மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!