மனம் ஆச்சி செய்த கன்னட மாநகராட்சி!
மனமாச்சி செய்த கன்னட மாநகராச்சி!
ஓரிடத்து உவகைக்காய் பேருந்து தேரெடுத்த ஈர் எட்டுகள், ,
சீறிப் பாய்ந்த வின் கொடியின் மொட்டுகள்,
ஆரார் சேர்ந்திட்டதும் சிரிப்பு வெடி வைத்தன, அந்த காவேரியை சுண்டி இழுத்தன!
ஆனந்தம் ஆர்ப்பரிக்க உவகை பூ பறிப்பு நிகழ்ந்தது,
அளுங்களே தாலாட்ட குளுங்களே களிப்பூட்ட பயணங்கள் நிகழ்ந்தது!
கைகள் வடம்பிடிக்க உள்ளம் படமெடுக்க,
நிம்மதி குடைபிடித்தது சிரிப்பின் சங்கதி பெருக்கெடுத்தது!
பிஞ்சுகள் துள்ளிட நெஞ்சமோ நொடிகளிடம் கெஞ்சியது,
நகரா நாட்களை உடுத்திட வேண்டுமென நகரும் நகரத்திடம் இறைஞ்சியது!
உறவுகளின் அணைப்பிலும் இணைந்திட்ட விரல்களின் இனிப்பிலும் உணவுகளோ சுவைத்தன,
உட்கொண்டதில் அல்ல அன்பு ஆட்கொண்டதில் எண்களின் இரைப்பைகள் நிறைந்தன!
மஞ்சுவின் பேச்சைப்போல் வாகனத்தின் ஏசியும் சுட்டது,
அத்துடன் ஓட்டெடுப்பை உடன் அமர்த்த மவுனமே மான்பரிந்து வழிவிட்டது!
பண்நீர்கட்டாவும் பட்டாம்பூச்சியும் வெயில் தூவி வரவேற்க,
பேட்டரி உந்தும் மிருகங்களின் சிறைபட்ட பொந்தும் சாமரம் வீசியது,
மகிழ்ச்சி கரைபுரள மனமன்ரோ கூசியது!
லால்பாக்கில் ஷாக் காரணம் அரங்கேறியது இடைவிடாத வாக்,
ஆயினும் வாங்கிவந்த வறுத்தது இனித்தது,
மா வெள்ளரி பிஞ்சுகளுக்கு அடிபணிந்த நாவன்ரோ அன்பின் நூலால் அனைவரையும் இணைத்தது!
வெளிச்சமும் இருளும் விரல்கள் வழியே கட்டிக்கொள்ள,
பாதைகள் பணிந்தன, காச்சிகள் கனிந்தன, பூக்கள் சிரித்தன புல்வெளிகள் சிலிர்த்தன!
அன்பின் குரல் கேட்டிட அழகு உடன் நடந்தது,
அதன் தடத்தில் மனதினை துளைத்ததில்,
சாளைகளுக்குள்ளும் பாதத்தின் சோலைகள் கிடைத்தது!
தங்கியது அறையல்ல மாளிகை,
உறங்கியது மெத்தை அல்ல இன்பத்தின் கத்தை!
என்னை சுழற்ற மண்ணை பிளந்து வந்தது சச்சின்,
எங்களின் அரட்டையால் மணந்தது ஆராரின் கிச்சன்!
திரையரங்கு நுழைந்ததும் சாகசமாக காட்டபட்டது தீபகற்பம்,
நாங்கள் கண்மூடி எடுத்த ஓய்வுக்கு முன் அவை அற்பம்!
தலைக்குமேல் வர்ணனையில் வின்னோசை,
சிரமபட்ட சிரம் சற்று சாய்ந்திட,
காதுகளுக்குள் இடிபட்டது குறட்டை பாஷை!
கபன் பூங்காவில் நின்று வாகனத்தை எண்ணத்தால் தூற்றினோம்,
வியர்வை சுற்றிச் சுற்றி விளையாட ஒருவரை ஒருவர் தேற்றினோம்!
மாளிகைக்குள் மடைதிறந்து கொண்டது கேளிக்கை,
நாங்கள் தொட்டு வருடியதில் கட்டவிழ்ந்துவிட்டது உடையார்களின் நாழிகை!
ஆங்கிலத்தில் ஒருபிடி பிடித்து ஆஹா ராஜ்யத்தின் கொடி நாட்டினேன்,
அனுப்பும் பணத்தில் சில பூஜ்ஜியம் இட்டு நான் வெறும் காமெடி பீஸ் என காட்டினேன்!
இரண்டு தம்பதிகளுக்கு செவ்வக விருந்து வைக்க,
உவகையே உதடுகளாகி வாழ்த்தினோம்,
அப்படியும் பிரிய மனமின்றி கூடி காலம் தாழ்த்தினோம்!
நாக்குகளுக்கு காவலென உடைபட்ட கேக்குகள் சுழன்றன,
நான்கு அறைகளும் அதிர்ச்சியில் மூச்சடைத்துப் போக,
எங்களின் மூட்டை முடிச்சுகள் அவற்றின் ஓய்விடம் நோக்கி நகர்ந்தன!
உள்ளமும் உடலும் சுற்றுலா வடிகட்டியில் சுத்திகரிக்கப்பட்டது,
உப்பு சுவை கொடுக்கும் வேர்வையும் நட்புச் சுவையால் துளிர்த்தது,
யாரிடமும் சொல்லாமல் நாளேட்டு கண்களிலும் பிரிவின் நீர் வேர்விட்டது!
இவன்,
உங்களின் அன்பினை என்றென்றும் நாடும்,
மகேந்திரன்!
Comments
Post a Comment