அவள் உடல் அல்ல இதயம்

 அவள் உடலல்ல இதையம்!


அவளை பார்க்க வேண்டாம் அப்படி மட்டும்.


நாளும் பொழுதும் இதையே செய்ய கூசவில்லையா?


எப்படி? என்கிற எரிச்சல் கேள்வி வேண்டாம்!


அப்பப்பா இப்படி என்று சொல்லுபடி இருந்ததில்லை!


வீசிய பார்வைகளில் வெளிப்பட்ட விரோதங்களும் குரோதங்களும்!


உங்களின் வக்கிரம் கொண்ட உக்கிர கண்கள்,


அவளுக்கு உடை உடல் என்கிற உருவகம் மட்டுமே கொடுத்தன!



அவள் உறவாக இருப்பதை கருவாக பார்த்து கவிதை பாடி,


நிலவாக பிரகாசிப்பதாய் அளவாக சுவைப்பதாய் நிலைபடுத்தும் நெருஞ்சி சொல் பேசி,


முத்திரை குத்திடும் உங்களின் அந்தகத்தின் முகத்திரை இனியேனும் விலகட்டும்!



அவள் அக்கா தங்கை என நா தடுக்கும் அடுக்கு மொழி உளறி,


தாய்க்குலம் அவளின் உள்ளமோ போர்க்களம் என்று பிதற்றி,


வெரிப்பதில் குட்டுடைந்து வெளிப்படுத்தும் ஈனச்செயல் இனி வேண்டாம்!



அவள் கால்களில் கொளுசினை மட்டும் காணும் கயமைத்தனம் போதும்,


வளவி கொண்ட கைகளை அளந்திடும் அமானுஷ்ய அருவெறுப்பு யாதும்,


ஐயோ வேண்டாம் இனி,


அவளின் ஆன்ம ஓசை அதனை கூர்ந்து கவனி!



அவள் அழகாய் பொட்டு வைத்து,


தொல்லைதரும் எட்டு மொழம் கட்டிவைத்து,


வளம் வரும் சேலை சூடிய சோலை என்பதெல்லாம் பெண்ணுக்கு நிரந்தர வலை,


என்னை போன்று அவளையும் சுமந்திட வேண்டும் வெற்றி மாலை,


என்று மாறிட வேண்டும் மானுட நாகரிக நிலை!



இலை விரித்து உழைத்து சமைத்த உணவிடவும்,


தலை விரித்து வாங்கி வந்த பூச் சூடவும்,


பிறந்தவளே பொறுமை தாங்கும் நில மகளே எனும்,


வசனங்களில் வசப்படுத்தலாம் என்கிற,


 நாசகாரம் வீசப்படட்டும் தெருவோரம்!



அவள் என் இச்சைக்கும் மிசைக்கும் உடைமை,


அடிமை படுதலே பெண் கடமை,


என்னும் அயோக்கிய கொடுமை விடை பெறட்டும்,


அவள் கொண்டிருக்கும் அற்புதங்கள் அதை மானுடம் பெறட்டும்!





ஆண் காதலுக்கே அவள் கூந்தல்,


அவன் மோதலுக்குத்தான் இந்த எழில் பந்தல்,


என்று அந்தி பகல் தொடரும்,


சுயநல நிந்திப்பு,


தீ கறைபட்ட கந்தலேன பொசுங்கட்டும்!



அவள் என்றாலே ஏக்கம்,


ஆண் கை படாது அவளுக்கு வராது தூக்கம்,


என்கிற அரக்கத்தனமான கிறுக்கு மன,


அவளின் ஊக்கம் கெடுக்கும் நோக்கத்தை தாக்கிடாமல் விலகட்டும்!



அவளிடம் இருப்பது அறிவு கடல்,


அவளின் ஆற்றலோ ஒரு சரித்திர திடல்,


அவள் இதையம் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் மடல்,


ஐயோ இனி நினைத்திட வேண்டாம்,


அவள் பென்னேனப்படும் வெறும் உடல்!


மகளிர் தின நல்வாழ்த்துக்கள் உரைக்கும், 


இவன்,

முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!