வேண்டும் அறத்தின் சரத்து!

 வேண்டும் அறத்தின் சரத்து!



சுயநல நாயகனும், சுமை விரும்பா பாலகனும் முடித்த மனம் விடுபட உண்டா தினம்!


வாசலை தாண்டா கால்களும், பதுங்கி ஆள நினைக்கும் தேள்களும், வெட்கம் இன்றி சேர்ந்ததை விளக்கிட ஏது வழி!


குழப்பிடும் கொடூர பேச்சும், அதற்கு முட்டுக் கொடுக்கும் இளைய மூச்சும், அருந்து பிரிய ஒரு  மருந்து உண்டா!


கொள்கை உரைத்திடா கோஷத்தையும்,

அண்ணன்,  தாய் மாமா உறவு பேசும்  நாராசங்களின் நேசத்தையும், எரிக்கும்  நெருப்பு உண்டா!


ஆளைக் கொல்லும் ஆபாச ஆளுமையும், அதன் காலைச்  சுற்றும் காலக்கொடுமையும், 

கசந்து இடம் புறம் செல்ல இருக்கிறதா பாதை!


கணக்கு காட்டும் கூட்டமும், அங்கு சிலரின் கழுத்தை நெரிக்கும் திட்டமும், சட்டப்படி விலக மன்றமே நீதிக்காய் எங்கனம்  உன்னை அணுக!


பொறுப்புகளை விரும்பா உயரமும்,  தடுப்புகளுக்குள் அடங்கா துயரமும்,  ஓரமாய் ஒதுங்கிட என்று சேரும் நல்ல நேரம்!


பதவிக்காய் அண்டிய அவளும், பகட்டுக்காய் விஷக் கொடிவிடும்  இவனும், கட்சிக் கடை விரிக்காமல் மூக்கு உடைபட்டு நடையை கட்ட  வேண்டாமோ ரௌத்திரக்கொடை!


லாட்டரி கூட்டாளியும்,  நீலாங்கரை சுண்டெலியும், துண்டு  இரண்டு என பிரித்து வீச எந்த அம்பேத்கர் சட்டத்திடம் பேச!


சங்கீதத்தை பனையூர் வீணையில் அடைத்து, மாதர் பாசத்தை நரம்புகளில் ஏற்றி புடைத்து, நடிக்கும் மோசத்தை அடித்து  பிரிக்க வேண்டும் சமூகத் துடப்பம்!


பனையூர் பதுங்கு குழியும், அங்கு   ஒளியும்  அரசியல் பிழையும், ஒழிந்து விழுந்திட எந்த சட்டத்தின் சரத்தை நாட!


இம்மண்ணை பொன்னாக்கிய  குடும்பங்களை, மண்ணோடு மண்ணாக்கும் அவன் புண் நாக்கை, தமிழ்  மணக்க செய்யாமல் பிளக்கும் மார்க்கம் உண்டா!


அவன் குட்டிக் கதையையும்,  தற்குறிக்கோள் மனதையும்,  கதம் கதம்மென  வதம் செய்தாள் வருமோ  ஏதும் சேதம்!


மூளை சலவை திட்டமும், நரி  ஊளையிடும்  உளவு நோட்டமும், வீழ்த்திட எந்த தேர்தல் பொத்தானை நாம் அழுத்திட!


மூதாதையரை காட்சிப்படுத்தி, முட்டாள்களை வைத்து ஆட்சி நடத்த துடிக்கும் இக்கால ஹிட்லரை, என்வண்ணம்  எதிர்காலம் விட்டு  விளக்குவது!


சொகுசான  பிரச்சாரமும், இளசுகளின் அச்சாரமும், உச்சாணியில் வைக்கும் என்று காணும் உல்லாச கனவை எப்படி வகுத்து  புற முதுகினை காணச் செய்வது!


ஊடகத்தைக் கண்டால் பாய்ச்சல், நாடகத் தனமாய் ஒலிபெருக்கி முன் கூச்சல், என்பதான  எரிச்சல் போலித்தனத்தை  பிரித்து கடிவாளம் இட வேண்டும் தர்மத்தின் இரைச்சல்!


தன் தங்க மகளுக்கு கண்ணீர், சிங்கப் பெண் என வார்த்தையில் செந்நீர் சிந்திடும் கபடதாரியை பெரியார் அன்றி  எந்த பகுத்தறிவு கோடாரி கொண்டு தோலுரிக்க!


திரையில் நடனமும், 

உள்  அறையில் சகுனமும் வைத்து பயணிக்கும் கோமாளி சகுனியை, நாசக்கார அணியை பலப்படுத்த எங்கனம் ஐயா  விடுவது!


தீங்கு தரும் திரைக்காரன், சுயநலப் பேய்  பிடித்த அமைதிப்படை வீரன், 

இந்த கைக்கூலி ஜனநாயக நாரதனை அப்புறப்படுத்த ஒப்புரவு சட்டத்தை வேண்டாமோ திருத்த!


இவன்,

முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!