அந்த குழந்தைகளின் இறுதி மூச்சு!
அந்தக் குழந்தைகளின் இறுதி மூச்சு! எனக்கு ஒன்றும் கல் மனசு இல்லை. நான் இரக்கமில்லா சூறாவளியோ அச்சுறுத்தும் புயலோ அல்ல. என்னைப்போல் சுரண்டப்பட்டவர் ஒருவரும் இருக்க முடியாது! உபரியாய் இருந்த நான் அபரிவிதமாய் சுரண்டப்பட்டு சுருங்கி கிடக்கிறேன். என்னை அழித்து பிழைக்கிறார்கள் ஆனால் பிழைப்பவர்களை அழிக்க நான் நினைப்பதில்லை! அதிலும் குழந்தைகள் என்றால் நான் தென்றலாகி விடுவேன். அவர்களை விட்டு விலகும் படி மூச்சடைக்க செய்தால் வாடிப்போகும் வாடை காற்றாகி போவேன்! அந்தக் குழந்தைகளிடமிருந்து என்னைப் பெயர்த்து எடுத்த போது, உயிர் உறிஞ்சி எடுக்கப்பட்ட அனல் காற்றைப் போல அவதையுற்றேன்! நான் பிரிக்கப்படுவது பொறுக்க முடியாமல் அவர்கள் துடித்த போது, ஐயோ! என்னுள் இருந்த ஈரப்பதம் பிரபஞ்சமே அலறிட ஓலமிட்டது! காற்றின் கழுத்தை நெரித்த அந்த கணத்தின் வலி அந்த கயவர்களுக்கு எப்படி தெரியும்? குழந்தை அரசியல் செய்பவர்களுக்கு குழந்தைகளை வைத்து செய்யப்படும் அரசியல் எப்படி உரைத்திருக்கும்? குழந்தை மொட்டுக்கள் விடும் மூச்சியில் தான் நான் உயிர் காற்றாய் உயிர் வாழ்கிறேன்! என்னை த...