ஒரு வேலியின் வேட்டை!
ஒரு வேலியின் வேட்டை! வேலிகள் விலை போய் வெகு காலம் ஆகிவிட்டது! அலங்கோலங்கள் அதிகமாகிவிட்டதே அதற்கு சான்று. அலங்கோலங்களை இருட்டடிப்பு செய்தும் அதையே பொற்காலம் என பிதற்றியும், தான் விலை போனதை அது மறைத்திட எத்தனிக்கிறது! அலங்கோலங்களுக்கு உற்றத் துணையாய் அநியாயங்களும் விழாக்காலம் காண்கின்றன! இது தேரோடும் விழா அல்ல உரிமைகளை கூறு போடும் விழா! மேளங்கள் கேட்பதில்லை மாறாக மிதிப்பட்ட சமத்துவத்தின் ஓலங்கள் தான் கேட்கின்றன! சுயநலம் அது பரிவட்டம் கட்ட, பிழைப்பு வாத அனுகூலம் ஒளிவட்டம் கூட்ட,, இறுமாப்புடன் இருப்பதை கெடுத்து அழிக்கும் காட்டாட்சியின் விழா! காவல் இருக்கிறேன் என்று ஆசை மொழி பேசி விட்டு, முதுகில் குத்தும் மோசடிக்காரர்களே படி அளந்தால் என்ன ஆகும்? உரிமைகள் பறிபோகும் திறமைகள் தீக்கரையாகும்! கடமைகள் கை கழுவப்பட கொடுமைகள் கையளிக்கப்படும்! ஏழ்மையை துட்சமென மதித்து தனிப்பட்ட செழுமைக்கு சாமரம் வீசப்படும்! சமத்துவ நேர்மையை நிர்மூலமாக்கி ஏற்றத்தாழ்வு வன்மங்கள் வளர்த்தெடுக்கப்படும்! நன்மைகள் விளைந்திடும் இளையோரின் கல்வியை ஊழல் பொய்மைகள் பெருகிடும் ஊழலின் வசம்...