ஒரு செருப்பின் பறந்த மனசு!

 ஒரு செருப்பின் பரந்த மனசு! 


எங்களை அவமானப்படுத்துவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்


உங்களுக்கு வேண்டுமென்றால் பெருமைப்படுத்தி கொள்கிறீர்கள். 


உங்களுக்கு வேண்டாம் என்கிற பொழுது சிறுமை பட்டு இருக்க பணிக்கிறீர்கள். 


காலுக்கு கீழே  இருக்கிறோம் என்பதற்காக எப்படி வேண்டும் என்றாலும் நடத்துவதா! 


உங்கள் பாதங்களுக்கும் எங்களுக்கும் தான் பந்தமே தவிர. 


ஏளனத்தோடும் எடுத்து எரிதலோடும் எங்களை ஏன் மாட்டி விடுகிறீர்கள்?


இயேசுவதற்கென்று வந்துவிட்டால் வாக்கியத்தின்  தொடக்கத்தில் எங்களை வைத்து விடுகிறீர்கள். 


எதற்கும் அசையாதவர்களை கூசும்படி செய்ய சகட்டுமேனிக்கு எங்களை கூப்பிட்டு அனுப்புகிறீர்கள்!


உங்களுக்காக தேய்ந்தாலும்  எங்களை வைத்து திட்டுவது ஓய்ந்தபாடில்லை! 


பாத தாங்கிகள் என பட்டம் இருந்து என்ன பிரயோஜனம், 


பழமை எனும் முதுமை தரித்து விட்டாலோ,


எங்களை விட்டு எரிவதில் உங்களின் வீரத்தை காட்டுகிறீர்கள்!


உங்கள் பராக்கிரமத்தில் இருக்கும் அக்கிரமத்தை,


அடிக்கு மேல் அடி வைத்து எடுத்து வைக்க முடிவெடுத்து விட்டேன்!


உங்களின் தூய்மைக்கும் வாய்மைக்கும் பங்கம் வரக்கூடாது என்று, 


அங்கத்திலிருந்து அவிழ்த்து வைத்து அடடா வேஷம் போட்டுக் கொள்கிறீர்கள்!


பள்ளங்களில் நசுங்கி பாதுகாக்கும் நாங்கள் சில உள்ளங்களை நசுக்க,


உடனுக்குடன் கை கொள்ளப்படுகிறோம் வாய் எள்ளிட இடிந்து அன்றோ  நோகிறோம்!


அடி மட்டத்தில் இருப்பவன் விட்டத்தை நோக்கி வருவதில் என்ன நட்டம் உங்களுக்கு? 


பிரிவையும் வெறுப்பையும் அவமானத்தையும் பேசவே,


நாங்கள் மேலே வர வேண்டும் என்று பொது புத்தி திட்டம் போட்டு கட்டம் கட்டி விட்டீர்கள்!


பல வண்ணங்களில் இருந்து ஜொலிக்கும் நாங்கள், 


உங்களின் எண்ணங்களில் மட்டும் ஏன் கருத்து போய் கிடக்கிறோம், 


வெறுப்பை வெளிப்படுத்த குறி வைத்து எறியப்பட்டன்றோ பறக்கிறோம்!


உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை விளங்கிக் கொள்ளுங்கள்! 


புதிதாய் இருக்கையில் பளபளக்கும் பளிங்குச் சுவர்களும்  ஜொலிக்கும் விளக்குகளும் சொந்தம் எங்களுக்கு,


இளமை கொண்டு நடக்கையில் இனிமை பேசி சிரிக்கையில் வெளிச்ச பந்தம் உங்களுக்கு! 


நீங்கள் வெட்கி தரைதொட்டு  விட்டாலோ நான் காலுடன் வாங்கி சிறைப்பட்டு விட்டாலோ,


எனக்கு தேய்மானமே வெகுமதி உங்களுக்கோ அவமானம் என்னும் நெற்கதி !


உங்களுக்கு நிலையாமை தத்துவம் உரைக்கும், 


எனக்கோ இல்லாமை மகத்துவம் பிடித்து அறுக்கும்! 


நீங்கள் இறக்கப்படும் பொழுது துறக்கப்படுகிறீர்கள், 


நானோ துறக்கப்படும் போது இறந்து போகிறேன்!


செருப்பினப்படும் நானும்,


பிறப்பென மண்ணை தொடும் நீங்களும், 


வெறுக்கப்பட்டே வாழ்கிறோம் முடிந்தவரை எல்லோராலும் கறக்கப்பட்டேசாகிறோம்!


காலனி ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலை பெற்றீர்களாமே? 


உங்களின் கால் அணியாம் என் மீது செலுத்தும் ஆதிக்கத்தை நீங்கள் எப்பொழுது விளங்கிக் கொள்ளப் போகிறீர்கள்?


உங்களின் சேவகன் தான் நான் ஆனால் ஏழைகள்  என்னை விட மோசமாக நசுங்கிய பொழுது,


மனிதனாய் தேய்ந்த ஒருவன் எடுத்து வீச மனிதாபிமானத்துடன் நான் பரந்தபொழுது, 


அவன் நடித்து பணம் ஈட்ட என்னைப்போல் செருப்பாய் தேய்ந்தவர்கள் இடிபாடுகளில் நசுங்கி இரந்தபடி இருந்த பொழுது,


அந்தக் கரூர் ஓலங்கள் செருப்பு ஆகிய என் ரத்த நாளங்களை வெடிக்கச் செய்த பொழுது,


மேலே நின்ற எந்த செருப்புக்கும் ஏன் என் ஓலம் கேட்கவில்லை! 


பறந்து வந்து எச்சரிக்கும் என் மனதின் குரல் ஏன் பற்றவில்லை!


அந்தப் புகழ்விரும்பி பெரிய செருப்பும்  அவனை மொய்த்துக் கிடந்த அடிமை செருப்புகளும் ஏன் சற்றும் அலறவில்லை!


இவன். 


முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!