ஒரு அழகிய தலைவனும் அவனைப் போல் வழுக்கிய ரசிகனும்!

ஒரு அழகிய தலைவனும் அவனைப் போல் வழுக்கிய ரசிகனும்!

 

உருவத்தின் அழகில் ஒளிந்து இருப்பதை ஒருவாறு  சொல்லுவது கடினம்!

 

அதிலும் அதற்கு இணங்கியவர்களை  கரையேற்றுவது நடக்காத கதை!

 

அந்த மடத்தன மயக்கத்தில் மாட்டிக் கொண்டவர்களை ஏமாற்றலாம் ஆனால் மாற்ற முடியாது!

 

அவன் போல் இருக்க வேண்டும் என்று இவன் நினைக்கிறான்,

 

அதற்காகவே தன் சுயத்தை இழப்பதையும் ரசிக்கிறான்!

 

விடலை பிள்ளைகளுக்கு தன் நடிக உடலை வைத்து அன்றோ அவன் வலை வீசுகிறான்!

 

வலைப்பட்டவன் எல்லாம் தன் நிலை விட்டவன் என்பதால்,

 

திருத்த தலை படுவது தகிக்கும் நெருப்பைக் கொண்டு தன் கை சுடுவது போன்றது தானே?

 

ஆடும் அவனின் கால்களிடமிருந்து அடங்காமல் இருக்க கற்று அலைகிறான்!

 

அவன் போடும் வேஷத்தில் இருந்து பாசம் இழக்கும்  நாசத்தில் விழுந்து அன்றோ அழியிரான்!

 

அவனின் வசனம் உதிர்க்கும் உதடுகளில் உயர் மனசை பதித்துச் சாகிறான்!

 

அவன் கண்கள் செய்யும் ஜாலத்தில் தன் இளமை காலத்தை ஐயோ அடகு வைத்துத் தொலையுறான்!

 

அவன் உடன் நடிக்கும் பெண்களைப் பார்த்து உயிர் தணிக்கும் உறவுகளை உடைத்து மடிகிறான்!

 

அவன் சிகை திமிரை வார்த்து தன் சுயமரியாதையை வேரோடு தகர்த்து,

 

எங்கெங்கும் பகை கூட்டி அதுவே பகட்டென பள்ளிலித்து அன்றோ பசப்புகிறான்!

 

அவனின் பணம் கொண்ட திமிரில் இவன் குணம் அதை தொலைத்து,

 

தன் மனித நிறம் அதை முற்றிலும் இழக்கிறான்,

 

வரம் என வாய்த்த வாழ்வை சிரம் குப்புற கவிழ்ந்து முழுமையாய் இழக்கிறான்!

 

அந்த ஒருமுக காரன் பல அறிமுக காட்சிகளில்,

 

பலரக தோற்றத்தை மெருகூட்டியாவது காட்டிட,

 

அவ்வாறு தோன்றியவனின் நகத்தை  நாதியத்துப் போயாவது தொட்டிட,

 

இந்த நவயுகக்காரன் வெட்கமின்றி அன்றோ துடிக்கிறான்!

 

அவன் விரல் அசைய இவன் மானம் கெட்டு மசிகிறான்,

 

ஐயோ அவன் குரல் கசிய அந்த மண்புழுவே வெட்கிட  நெலியிரான்!

 

எவனோ எழுதி தந்ததை அவன் பக்கம் பக்கமாய் பேச,

 

அதை மனனம் செய்யவே ஜனனம் கொண்டது போல் நடப்பவனை எப்படி ஐயா ஏச!

 

அந்த ஈரோட்டு உப்பை  சிறிது உணவில் கலந்து கொடுங்கள் ஐயா இவனுக்கு கொஞ்சமேனும் கூச!

 

அவன் ஒரு அவதரிப்பு என்று இவன் அனத்துறான்,

 

இல்லை அவன் வெறும் அருவருப்பு என்று சொன்னால் ஏற்க மறுத்து ஐயோ பாடாய்படுத்துறான்!

 

திருச்சியிலிருந்து தலை தெரிக்க ஓடிய புரட்சி செய்தவனை அடச்சி விட்டு விடு என்றால்,

 

அவனுக்கும் மேல் நடிச்சு எங்கள் அண்ணா என்ன துடிச்சு கோபம் தரும் எரிச்சலை தானே கொடுக்கிறான்!

 

அவனின் காணொளி வீரத்தில் அதில் பொதிந்திருக்கும் புழுகு சாரத்தில்,

 

பொன்னான நேரத்தை இவன் மொத்தமாய் இழக்கிறான்,

 

உறவுகளை பிரிந்தவர்களின்  மனபாரத்தின் வலி அறியாமல் எப்படி இந்த மண்ணில் நடக்கிறான்?

 

பொறுப்புகளை ஏற்காத புள்ளுருவி தலைவனுக்காக,

 

நெருப்பு போல் சுடும் நாராசச் சொற்களை,

 

பலர் வெறுப்பது தெரிந்தும் கண்ணியமற்று  தெறிக்கிறான்,

 

பெற்றவரும், தனக்கு உற்றவரும், வகுப்பின் ஊடே இவன் உளவியலை கற்றவரும் எடுத்துச் சொன்னாலும் அப்பப்பா மிருகக் கணக்காய் அன்றோ  முறைக்கிறான்!

 

எழில் பார்த்து செய்யும் தொழில் அல்ல அரசியல்,

 

மனித ஈரம் குறையாமல் காக்கும், நேரம் அறியாமல் உழைத்து உடல் வேர்க்கும்,

 

யாருக்கும் யாரும் அடிமையல்ல என சமமாய் கை கோர்க்கும்,

 

தர்க்கம் மனம் வீசும்  மார்க்கம் தானே அது என்பதை எப்படி ஐயா இந்த நடிகனின் ரசிகக்கூட்டம் சிந்தித்து ஏற்கும்!

 

இவன்.

 

முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!