பணிய வைத்த பனிச்சறுக்கு:
பணிய வைத்த பனிச்சறுக்கு: இறுக்கம் உடைந்த இயற்கையின் பெருக்கம். தலை தெரிக்க விரைந்ததால் தரணியில் ஓர் நடுக்கம். பனியேறி இறங்கிட மலையேறின உயிர்கள். புரட்டிப் போட்டதில் புதைகுழி ஆயினவே எழில்கள்! வேண்டியதோ நளினம் தீண்டியதோ மரணம். புனிதப் பயணம் அந்தப் புதிற்குள் சரிரச் சயனம். சுற்றிய உலாவில் வற்றியது நினைவு. மான்டோர் யாவரும் உயிர் வேண்டோரின் கனவு! கூடிய ஆன்மாக்கள் பாரத்துடன் அகதிகளாக, அடைக்கலம் தந்தன ஈரத்துடன் சகதிகள்! இமயத்தின் இறுதி பல குருதிக்குள் குடியேறியது மறதி! அன்றோ இயற்கையின் மடியில், இன்றோ அசைவற்று பூமிக்கு அடியில்! எல்லாம் ஒரு நொடியில் மொத்த உற்சாகமும் இருளின் பிடியில்! கலைத்தாடும் கவிந்தாயின் விளையாட்டு, இதற்கு கண்ணீருடன் கர்வமற்று கைதட்டு! உயர் மலை வாழ வழிகாட்டு, உன் பெயரின் சந்ததியை அப்படியே நிலைநாட்டு! உடைத்துக் கொண்ட தேக்கம், மெல்லிய பணி என்றாலும் அதிர்ந்து தாக்கும்! சுயநல இன்பத்தின் ஏக்கம், சினந்த இயற்கையின் முன் அது தோற்கும். எத்தனை காலம் நம்மை அது பொறுக்கும், இமயத்திற்கும் மாரடைக்க இப்படித்தான் வியர்க்கும்! ஆற்றின்...