பணிய வைத்த பனிச்சறுக்கு:
பணிய வைத்த பனிச்சறுக்கு:
இறுக்கம் உடைந்த இயற்கையின் பெருக்கம்.
தலை தெரிக்க விரைந்ததால் தரணியில் ஓர் நடுக்கம்.
பனியேறி இறங்கிட மலையேறின உயிர்கள்.
புரட்டிப் போட்டதில் புதைகுழி ஆயினவே எழில்கள்!
வேண்டியதோ நளினம் தீண்டியதோ மரணம்.
புனிதப் பயணம் அந்தப் புதிற்குள் சரிரச் சயனம்.
சுற்றிய உலாவில் வற்றியது நினைவு.
மான்டோர் யாவரும் உயிர் வேண்டோரின் கனவு!
கூடிய ஆன்மாக்கள் பாரத்துடன் அகதிகளாக, அடைக்கலம் தந்தன ஈரத்துடன் சகதிகள்!
இமயத்தின் இறுதி
பல குருதிக்குள் குடியேறியது மறதி!
அன்றோ இயற்கையின் மடியில், இன்றோ அசைவற்று பூமிக்கு அடியில்!
எல்லாம் ஒரு நொடியில் மொத்த உற்சாகமும் இருளின் பிடியில்!
கலைத்தாடும் கவிந்தாயின் விளையாட்டு, இதற்கு கண்ணீருடன் கர்வமற்று கைதட்டு!
உயர் மலை வாழ வழிகாட்டு, உன் பெயரின் சந்ததியை அப்படியே நிலைநாட்டு!
உடைத்துக் கொண்ட தேக்கம், மெல்லிய பணி என்றாலும் அதிர்ந்து தாக்கும்!
சுயநல இன்பத்தின் ஏக்கம், சினந்த இயற்கையின் முன் அது தோற்கும்.
எத்தனை காலம் நம்மை அது பொறுக்கும், இமயத்திற்கும் மாரடைக்க இப்படித்தான் வியர்க்கும்!
ஆற்றின் தீர்ப்பெழுதும் பெருக்கம், அதனால் பிற உயிர்களுக்கும் தீரவில்லை நடுக்கம்.
மமதையில் மானுடம் கொழிக்கும், மரணப் பரிசளித்து பிரபஞ்சத்தின் நியதி சிரிக்கும்!
இயற்கையின் எல்லைகளில் வேண்டாம் அரசியல்,
அதை தவிடு பொடி ஆக்கிவிடும் ஒரு பனிப்புயல்!
எச்சரிக்கை ஆங்காங்கே தெரியுது,
அதன் அலட்சியமே ஆசையாக திரியிது!
அண்ணாந்தாள் தென்படும் உயரம்,
அது குடை சாய்ந்தால் நிலையாது எவ்வுயிரும்!
இறுகினால் எதுவும் தெரியாது, உருகினால் துளி கனமும் உயிர் வாழ முடியாது!
சேற்றுடன் பெருவெள்ளம் நீண்டது, அதில் அகப்பட்டு அப்பாவி உயிர்களே மாண்டது!
ரசித்திட கொடை கொடுத்தால் இமயத்தாய், அவமதித்திட உடைபட்டால் காரணம் கணந்திடும் "எல்னினோய்!"
புரிந்திடா இயற்கையின் சட்டம்,
படையெடுத்தால் நாளை உறைந்து இன்றினுள் முட்டும்!
ஆன்மீக மண்ணும் ஆத்திரம் கொண்டது, நோகடித்த சுரண்டலால் ரௌத்திரம் பூண்டது!
இன்பத்தின் முகவரிகள் எரிச்சலுற்று எழுதின துன்பத்தின் முடிவுரைகள்!
சுதாரிக்க இவையன்றோ அறிகுறிகள், மருதலிக்க நீண்டிடுமே துயரத்தின் தொடர்கதைகள்!
அற்பமே மோதிட வேண்டாம் அது இயற்கை,
ராட்சச சர்ப்பமாய் சீறிட தழைக்காது சாகசத்தின் வாழ்க்கை!
பழகிவிட்டோம் பகட்டான விளம்பரம் முகம் சுளிக்கும் ஆடம்பரம், அங்கிருந்து விடுபட மறுத்தால் இப்படித்தான் விபரீத பாடம் வரும்!
இவன்,
முனைவர். உ. மகேந்திரன்!
Comments
Post a Comment