Posts

இனி அப்படி யாரும் பிறக்கக் கூடாது!

 இனி அப்படி யாரும் பிறக்க கூடாது! இலச்சினையும் முத்திரையும் அதற்காகவே முண்டியடித்து காத்து கிடக்கின்றன! ஆயிரம் அதிகார காகிதங்களின் மேல் அன்றாடம் மோதினாலும், ஒரு தாளின் மேல் தடம் பதிக்க தான்தோன்றி தனமாய் தவம் இருக்கின்றன! அந்த தாளின் எழுத்துக்கள் வெங்கோல் கழுத்துகளுக்கு இறுதி இறுக்கத்தை, கொடுத்து குருதியின் கொதிப்பினை வதக்கிட  துடித்தபடி கண்ணிவைத்து காத்து இருக்கின்றன! அது ஒரு கனவு திட்டம் என்பதால் அல்ல, ஒரு கூட்டத்தின் கனவை கலைக்க போகும் தீய திர்மானம் ஆதலால்! இது ஒன்றும் யோசனையில் எடுத்த முடிவு அல்ல,, கண்ணின் நுனியில் அதன் வெளிச்சத்து கூச்சத்தில் கூடி எடுக்கப் பட்டது, வெளிச்சமில்லா விழிகளை தயவு தாச்சமில்லா விதஹ்த்தில், அரசானை பதத்தில் மோச்சம் தந்திடும் பாய்ச்சல் தானிது! ஐயமில்லை அதிகார வெளிச்சங்களின் ஆசியில் அப்படியே செய்ய பேசிய சூழ்ச்சி முடிச்சு  வகையறாவை சேர்ந்தது! அவர்கள் இருப்பதால் பிறந்திடும் வெறுப்பினை விரட்டிட, போராடிடும் அவர்களின் குணங்களை கசக்கி சுருட்டிட, எல்லாம் அடக்கியும் அடங்கிட மருத்திடும் எஞ்சியதை தடுத்திட, உரிமை பேசி சட்டம் தூக்கிடும் சில கைகளை உடைத்திட, ச...

இருபத்தி நான்கு என்னும் மத ஆணை!

 இருபத்துநான்கு என்னும் மத ஆணை! மதம் பிடிப்பதன் உருவம் பெரிதாக இருக்க வேண்டும் என்பது இல்லை.  விரல்கள் இடுக்கில் வைக்கும் பேப்பர் அளவிற்கு இருக்கலாம்.  அதில் அச்சிடப்படும் வார்த்தைகளும் வரிகளும், சமந்த ப்பட்டோருக்கான சம்மதத்தை  மிதித்து அழிக்கும், உரிமைகளை வதம் செய்து அதிகார ஆணவத்தில் கூத்தடிப்பதாகவும், இருக்கவும் செய்யலாம் இருக்கக் கூடாது என்பதற்காகவும் செய்யலாம்! அரசுகளின் ஆணையில் வார்த்தைகள் பதமாய் அச்சிடப்படும். அந்த அச்சுக்குள் கலந்திருக்கும் நச்சுக்களை தரம் பிரித்தால்,  அருவருப்போ அல்லது உயிர் துறப்போ இரண்டில் ஒன்று உங்கள் இதயம் தொடும்! இனி இதயங்களை பத்திரப்படுத்திக் கொள்வது கடினம்.  காரணம் அச்சுகளைக் கொண்டல்ல நச்சுகளைக் கொண்டுதான் ஆணைகள், வெளிவருவது வழக்கமானது அது காவு வாங்கும் பழக்கத்தை கண் மூடாமல் பேணுது! வேலா வேலைக்கு ஆணை ரதம் எனும் அறிக்கை வரும், பலரின் வேலை எடுக்கும் வேலையை செய்தபடியும், அதிகாரத்தின் வக்கிரமாய் நிலை பெறும், அடச்சி இதுவன்றோ புழுத்துப் போன ஜனநாயகத்தின் நிலவரம்!  பார்வை அற்றோருக்கு கொடுத்த ஒதுக்கீட்டை பறிக்கும் பம்மாத்தும் வளம...

ஒரு வேலியின் வேட்டை!

 ஒரு வேலியின்  வேட்டை! வேலிகள் விலை போய் வெகு காலம் ஆகிவிட்டது! அலங்கோலங்கள் அதிகமாகிவிட்டதே அதற்கு  சான்று. அலங்கோலங்களை இருட்டடிப்பு செய்தும் அதையே  பொற்காலம் என பிதற்றியும், தான் விலை போனதை அது மறைத்திட எத்தனிக்கிறது! அலங்கோலங்களுக்கு உற்றத் துணையாய் அநியாயங்களும் விழாக்காலம் காண்கின்றன! இது தேரோடும் விழா அல்ல உரிமைகளை கூறு போடும் விழா! மேளங்கள் கேட்பதில்லை மாறாக மிதிப்பட்ட சமத்துவத்தின் ஓலங்கள் தான் கேட்கின்றன! சுயநலம் அது பரிவட்டம் கட்ட, பிழைப்பு வாத அனுகூலம் ஒளிவட்டம் கூட்ட,, இறுமாப்புடன் இருப்பதை கெடுத்து அழிக்கும் காட்டாட்சியின் விழா! காவல் இருக்கிறேன் என்று ஆசை மொழி பேசி விட்டு,  முதுகில் குத்தும் மோசடிக்காரர்களே படி அளந்தால் என்ன ஆகும்? உரிமைகள் பறிபோகும் திறமைகள் தீக்கரையாகும்! கடமைகள் கை கழுவப்பட கொடுமைகள் கையளிக்கப்படும்! ஏழ்மையை துட்சமென  மதித்து தனிப்பட்ட செழுமைக்கு சாமரம் வீசப்படும்! சமத்துவ நேர்மையை நிர்மூலமாக்கி ஏற்றத்தாழ்வு வன்மங்கள் வளர்த்தெடுக்கப்படும்! நன்மைகள் விளைந்திடும் இளையோரின் கல்வியை ஊழல் பொய்மைகள்  பெருகிடும் ஊழலின் வசம்...

வளைக்கப்படும் வளாகங்களும் விதிகளும்!

 வளைக்கப்படும் வளாகங்களும் விதிகளும்! நீங்கள் நான் என்கிற சாதாரணத்திற்கு அது சாத்தியம் இல்லை.  முட்டி முயன்றாலும் சாதாரணங்களுக்கு எதையும் சாத்தியப்படுத்தும் சாதகம் இன்று இல்லை! பாதகங்கள் கூர்மைப்பட்டு பாதங்களுக்கு கீழ் பள்ளமே  பறித்தாலும், ராட்சத வெள்ளம் ஆளும் அணைக்கட்டே  கைவிட்டிட அழித்தாலும், ஒழுங்கிட்ட விதிகள் வழங்கிட்ட கணவான்களினாலேயே மழுங்கிட்டு போனாலும், சங்கங்களாய் பிரிந்து உறங்கிட்ட வேளையில், அடிமை விலங்கிட்டு கல்வி அதிகாரம் எவன் வீட்டு சொத்தாய் ஆனாலும், ஆசிரிய சாதாரணங்களால் பொற்கால அரசின் வேதகணங்களை அசைத்திடவே முடியாது! அசைத்திட  வேண்டிய அத்தனை பலத்தையும், மொத்தமாய் அளவிட்டு அங்குலம் அங்குலமாய், பிளவிட்டு உலை வைத்தார்களே ஐயோ அந்த, ஆளும் கலையில் கரைக்கண்டு சில மலை  உண்ட மாதவன்கள்! இன்று அவர்கள் கொண்டு வந்திருக்கும் நிலையோ, பெரும் விலை கேட்கும் கொலைபாதகம்  கொண்டது! அது உயிர் எடுக்க முடிவெடுத்துவிட்டது கத்தியால் அல்ல புத்தியால்!  அதன் புத்திக்குள் பொதிந்திருப்பது தான் ஐயா விஷக்கத்தி! அது தாக்கி நம்மை வீழ்த்த  தலை  படுகிறது என்பது, ...

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

 தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா! அவரின் நகர்வலம் இல்லா வலைதளம் கிடையாது!  ஒய்யார குதிரையில் நகர்ந்து ஒரு அங்குலத்தையும் அவர் விட்டதில்லை.  விரட்டும் குதிரையை மிரட்டும் சாட்டைக்கு சமூக நீதி என்று பெயர்.  குதிரை அனுமதிக்காமல் அந்த சாட்டையும் இந்த ராஜாவும், ஒரு வேட்டைக்கும் போவதில்லை எந்த கோட்டையும் தாண்டுவதில்லை! அவர் பொதுவாக வேட்டையாடுவது விளிம்பு நிலை உரிமைகளை தான்! அந்தக் கோட்டினை  தாண்டுவது ஓட்டினால் வரும் வேட்டின் நினைவால் தான்! சொல்லப்பட்ட விளிம்பு நிலையும்  அதன் ஓட்டும், அதிகார ராஜாவின் அங்கத்தை அதிகாரப்படுத்தும் இரண்டு கண்கள்! மறக்க வேண்டாம் அந்த குதிரையின் கண் அசைவிற்கு, அதிகாரத்தில் கண்களே அடங்கும் அந்த சமூக நீதி சாட்டையும் சத்தம் இன்றி இணங்கும்! அவரின்  பாதப்படாமல் இந்த குதிரை பார்த்துக் கொள்வதே  தான் சேதப்படாமல் இருக்கத்தான்! அந்த நான்கு கால் பல்லக்கு வெளிச்சப்பட்டு, எல்லோரையும் நம்ப வைத்த விடியலை இருளாக்கியதே கல்வியின் காரிருளுக்கு காரணம்! ஆனால் அந்த காரிருளோ  குறிப்பிட்ட இந்தக் காரியக்கார குதிரைக்கு, வணிக அட்சய பாத்திரத்தை பரி...

தனியார் பேய் பிடித்த அரசு!

 தனியார் பேய் பிடித்த அரசு!  ஆளும் அரசாங்கம் என்று செய்தி அறிக்கை அவ்வப்பொழுது வருது. உண்மையில் அது ஆடும் அரசாங்கமாக ஆகி ஆண்டுகள் அதிகம் ஓடிவிட்டது. அப்படி ஆடவில்லை என்றால் அது ஆட்டம் கண்டுவிடும் என்பதில் ஐயமில்லை!  ஆட்டம் காணச் செய்ய ஒரு கூட்டம் கவன குறைவின்றி நோட்டம் விட்டுக் கொண்டே தான் இருக்கிறது! நோட்டம் விடுபவரின் நோக்கத்தில் ரொக்கம் மட்டுமே பக்கம் பக்கமாக இருக்கும், அது விற்கும் வாங்கும் நெருக்கத்தில் நிரப்புதலை சேர்க்கும்! ஆட்டம் காணாதிருக்க அவ்வப்பொழுது சட்டம் திட்டமிட்டு, ஆளுபவரை ஆட்டி வைக்கும் ஆட்களின் ஆசையை வட்டமிடும்! அந்த வட்டமிடுதலில் நேர்மையின்  கொட்டம் அடங்கும் என்பது மட்டும் திட்ட வட்டம்! தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று சான்றளிக்கப்பட்டதும் சற்று சறுக்கி விட்டது போல. கைதேர்ந்த அரசு என்று புகழ்ந்துறைக்கப்படுவதில் புலகாங்கிதம் கொள்ளத் தொடங்கி விட்டது அது! வேண்டியதைக் கொடுத்து மக்களிடமிருந்து ஆட்சியை கரப்பதில் சிறந்த பின்,  கடை விரிக்க தொடங்கிவிட்டனர் போராட்ட தடை விதிக்கும் மாண்புமிகு மாமணிகள்! தடை விதிக்க சொன்னதும் அவர்கள் யாருக்காய் அரசையே க...

AN UNHEARD GRUMBLE OF A CLASSROOM!

AN UNHEARD GRUMBLE OF A CLASSROOM!   I am not just a blackboard, benches and a broken chair: Making me elegant cannot be quantified to be smart. Procurement of a resplendent projector or a digitised gadgets, Might benefit your contract but don’t endorse that, Essential interact which was instrumental to brighten, The pupal, and spirited them to be straightened, With upright rage and polite courage, That had launched them into an adorable stage and accorded  the internal urge!   Do not elevate me, understand? By keeping aside the giver and the got, Through schemes, terms and fames, I am being loaded and invaded, Your facilities have robbed the treasures, And has infused unbreathable pressures, Let your bureaucratic intrusion have an unbiased vision, In the name of innovation, you have made me a traumatic prison!   The instructor and the instructed are distanced: The unpragmatic orders do keep it unbridgeable, I am pained to ...