இனி அப்படி யாரும் பிறக்கக் கூடாது!

 இனி அப்படி யாரும் பிறக்க கூடாது!



இலச்சினையும் முத்திரையும் அதற்காகவே முண்டியடித்து காத்து கிடக்கின்றன!


ஆயிரம் அதிகார காகிதங்களின் மேல் அன்றாடம் மோதினாலும்,


ஒரு தாளின் மேல் தடம் பதிக்க தான்தோன்றி தனமாய் தவம் இருக்கின்றன!


அந்த தாளின் எழுத்துக்கள் வெங்கோல் கழுத்துகளுக்கு இறுதி இறுக்கத்தை,


கொடுத்து குருதியின் கொதிப்பினை வதக்கிட  துடித்தபடி கண்ணிவைத்து காத்து இருக்கின்றன!


அது ஒரு கனவு திட்டம் என்பதால் அல்ல,


ஒரு கூட்டத்தின் கனவை கலைக்க போகும் தீய திர்மானம் ஆதலால்!


இது ஒன்றும் யோசனையில் எடுத்த முடிவு அல்ல,,


கண்ணின் நுனியில் அதன் வெளிச்சத்து கூச்சத்தில் கூடி எடுக்கப் பட்டது,


வெளிச்சமில்லா விழிகளை தயவு தாச்சமில்லா விதஹ்த்தில்,


அரசானை பதத்தில் மோச்சம் தந்திடும் பாய்ச்சல் தானிது!


ஐயமில்லை அதிகார வெளிச்சங்களின் ஆசியில் அப்படியே செய்ய பேசிய சூழ்ச்சி முடிச்சு  வகையறாவை சேர்ந்தது!


அவர்கள் இருப்பதால் பிறந்திடும் வெறுப்பினை விரட்டிட,


போராடிடும் அவர்களின் குணங்களை கசக்கி சுருட்டிட,


எல்லாம் அடக்கியும் அடங்கிட மருத்திடும் எஞ்சியதை தடுத்திட,


உரிமை பேசி சட்டம் தூக்கிடும் சில கைகளை உடைத்திட,


சங்கம் மீதமர்ந்து அங்கம் அதிர்ந்திட அலறும் சில பத்துகளை நய்யப் புடைத்திட,


அதை பிறப்பித்திட வேண்டும்,


பிறகு எது ஊனமுற்றதில் நாம் போடும் கோட்டினை தாண்டும்!


அரசுக்கே வேலை இல்லை என்ற போது,


அரசு வேலை வேண்டுமென்று அணிதிரண்டு வந்து நின்று,


ஆவணங்கள் சான்றளித்து,


அவை அமல்படுத்த விள்ளையெனில் போராடி சாலை மறித்து,


அங்கிருந்து துரத்தினாலும் வைராக்கியத்துடன் வியாபாரித்து,


அவ்வப்போது வழக்கு தொடுத்து இருட்டடிப்பதை அந்த மன்றங்களில் எடுத்துரைத்து,


கழுத்தறுக்கும் கருப்பு கண்ணாடிகளை அகற்றிட ஓர் ஆணை வரும்!


தலைமை அமைச்சரின் அப்பா எனும் தற்புகழ் நிலைமையை,


துதி பாடி புகழ் கூட்ட,


ஒதுக்காத ஒதுக்கீட்டை ஏட்டுச் சுரக்காய் என,


அந்த சட்டத்து மன்றத்தில் எடுத்துக்காட்ட,


அது அரசு ஆணை உடை தரித்ததும்,


அலுவலகங்களுக்கு படையெடுத்து,


சிறப்பு ஆள் சேர்ப்பினை தாமதம் இன்றி நடத்து,


என்பதை தப்பான அரசு தப்பிக்க போட்ட காகிதத்தை ஆயுதம் ஆக்கி,


படித்தவர்களுக்கு வேலை தராது  இருப்பது எப்படி என்பதை நன்கு படித்து வேலை பெற்ற,


அதிகாரிகளே வெறுத்து போகும் அளவிற்கு,


சட்ட சரத்துகளாய் கருத்துரைத்து,


தகுதிக்கு வேலை கேட்கும் தன்மானம் விரைவில் தடைபெறும்!


ஆள்சேர்ப்பு ஆணைக்குறித்து அணத்த வேண்டாம் கருணை தருகிறோம்,


தற்காலிகத்தை பொற்காலம் ஆக்கிட போராட வேண்டாம்,


மாறாக ரயில் வாணிபத்தை மேம்படுத்த மானியம் தருகிறோம்,


ஒதுக்கீடு கேட்டு மொத்த  ஊழியர்கள் எவ்வளவு என்று என்னிட வேண்டாம்,


எங்கள் அதிகாரம் போல் பிய்ந்து  போன நாற்காலிகளை பின்னிட தருகிறோம்,


இலக்கத்தில் மாத ஊதியம் பெறும் இலக்குகள் வேண்டாம்,


வயிறு பிழைத்திட வழி தரும் ஆயிரம் கொஞ்சம் கொசுருடன் வரும்,


கிளர்ந்து எழுவதையும் உத்தரவுகளை கிளறி அறிவதையும்,


அரசு இனி அயர்ந்து பார்க்காதூ,


இந்த உத்தரவு மட்டும் போட்டு விட்டால் நிச்சயம் உங்கள் கரங்கள் கோர்க்காது!


இதோ இந்த திராவிட ராஜ்ஜியம்,


பார்வையற்றோர் அறிவுடன் வேர் விடாமல்  இருக்க,


அரசாணை நிலை எண் பூஜ்ஜியத்தை  ஊரறிய தருகிறது!


பார்வையின்றி யாரும் பிறக்கக் கூடாது,


அப்படியே பிறந்து விட்டால் கூட இனி கல்வி கற்று அவர்கள் சிறக்கக்கூடாது!


இவன்.


கவிஞர். 

வெண்கோலன்!

Comments

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!