Posts

காதலே நீ இருக்கும் வரை!

காதலே நீ இருக்கும் வரை ஆன்மாக்கள் அழியாது!  காதலே நீ நடமாடும் வரை பாசாங்குகள் தலையெடுக்காது!  காதலே நீ சுவாசிக்கும் வரை நம்பிக்கைகளின் புதுப்பிப்பு நின்று போகாது!  காதலே நீ தொடும் வரை விரல்களின் இதயம் மாரடைப்புக் கொள்ளாது!  காதலே நீ பெண்ணென  உலாவும் வரை அவமானங்கள் அரியணை ஏறாது!  காதலே நீ சமூகத்தை காவல் எனக் காக்கும் வரை கற்பிதங்கள் கால் மேல் கால் போடாது! காதலே உன் நேர்மை விளிம்புகளுக்கு விலாசமாகும் வரை வெளிச்சங்களின் மூர்க்கத்தனம் தலை விரித்தாடாது! காதலே உயிர்களுக்கு  ஊட்டச்சத்தென நீ திகழும் வரை   வதந்திகள்  வல்லாதிக்கம் செய்யாது! காதலே நீ இணைகளை இரண்டு தேகக்  கோட்பாட்டில் இருந்து எட்டி அப்பால் வைக்கும் வரை  உடல்களின் மீது செய்யும் அரசியல் பிழைக்காது! காதலே  காற்றென மழையென நீ உயிர் விதைக்க அவதரிக்கையில் செயற்கைகளின் சினுங்கல் செல்லுபடி ஆகாது! காதலே நீ கொண்டிருக்கும் எளிமையை குறிஞ்சி மலராய் அவ்வப்பொழுது அடையாளம் காட்டிட காகித மலர்களின் ஆர்ப்பரிப்பு நிலைக்காது! காதலே உனது உரையாடல் அமைதி மொழியாய் நிகழும் வரை கூச்சல்களின் ஆரவா...

அவர்களுக்குத்தான் அனைத்தும் அத்துபடி!

 அவர்களுக்குத்தான் அனைத்தும் அத்துபடி! அவர்கள் அறியாதது என்று அனேகமாய் இருக்க முடியாது.  அதிகாரம் செய்ய மதிபாரம் ஏற்றிப் பிழைக்கும் மரபினர் இவர்! மது சொட்டும் சொற்களை முதுகு வெட்டும்  நுண்கலை, தேர்ந்தெடுக்க பட்டவன் சார்ந்திருக்கும் சலுகை பட்ட எண்களை, சனங்களை கணிப்பொறிக்குள் சங்கேதப்படுத்தி, மேதமை என மாறுதட்டும்  அவர்களின்  அறிவு புஜங்களை, சத்திய நிஜங்களை மாற்றிப்போட்டு சத்தமாய் உரிமைகளை கூறு போட்டு , செருக்குடன் தழைத்திடும் அவர்களின் விசுவாச நிறங்களை, போராடி முச்சந்திக்கு எவன்  வந்தாலும் பச்சோந்தியாய் இருக்கும், அவர்களின் பராக்கிரம அதிகார குணங்களை, உயர் பொறுப்பில் நிலைத்திட செய்யும் அவர்களின் அண்டிப் பிழைப்பு சிணுங்களை, சங்க வெள்ளாவியில் போட்டு வெளுத்தாலும், கரை திருத்தவோ நேர்மையின் சிறைபடுத்தவோ அவ்வளவு எளிதில் இயலாது!  உரிமை கோப்புகளை குப்பைப்படுத்தும், அவர்களின் தான்தோன்றி த்தனமான தீர்ப்புகளை, ஓட்டு பெற்றவனுடன்  கூட்டு வைத்து, அவன் காதில் விளிம்பு நிலை வேட்கைகளை பொய்படுத்தி போட்டு வைத்து, வைத்ததால் புண் படுவது கண் காண முடியாத தன்மானத்தினர், என்ப...

இனி அப்படி யாரும் பிறக்கக் கூடாது!

 இனி அப்படி யாரும் பிறக்க கூடாது! இலச்சினையும் முத்திரையும் அதற்காகவே முண்டியடித்து காத்து கிடக்கின்றன! ஆயிரம் அதிகார காகிதங்களின் மேல் அன்றாடம் மோதினாலும், ஒரு தாளின் மேல் தடம் பதிக்க தான்தோன்றி தனமாய் தவம் இருக்கின்றன! அந்த தாளின் எழுத்துக்கள் வெங்கோல் கழுத்துகளுக்கு இறுதி இறுக்கத்தை, கொடுத்து குருதியின் கொதிப்பினை வதக்கிட  துடித்தபடி கண்ணிவைத்து காத்து இருக்கின்றன! அது ஒரு கனவு திட்டம் என்பதால் அல்ல, ஒரு கூட்டத்தின் கனவை கலைக்க போகும் தீய திர்மானம் ஆதலால்! இது ஒன்றும் யோசனையில் எடுத்த முடிவு அல்ல,, கண்ணின் நுனியில் அதன் வெளிச்சத்து கூச்சத்தில் கூடி எடுக்கப் பட்டது, வெளிச்சமில்லா விழிகளை தயவு தாச்சமில்லா விதஹ்த்தில், அரசானை பதத்தில் மோச்சம் தந்திடும் பாய்ச்சல் தானிது! ஐயமில்லை அதிகார வெளிச்சங்களின் ஆசியில் அப்படியே செய்ய பேசிய சூழ்ச்சி முடிச்சு  வகையறாவை சேர்ந்தது! அவர்கள் இருப்பதால் பிறந்திடும் வெறுப்பினை விரட்டிட, போராடிடும் அவர்களின் குணங்களை கசக்கி சுருட்டிட, எல்லாம் அடக்கியும் அடங்கிட மருத்திடும் எஞ்சியதை தடுத்திட, உரிமை பேசி சட்டம் தூக்கிடும் சில கைகளை உடைத்திட, ச...

இருபத்தி நான்கு என்னும் மத ஆணை!

 இருபத்துநான்கு என்னும் மத ஆணை! மதம் பிடிப்பதன் உருவம் பெரிதாக இருக்க வேண்டும் என்பது இல்லை.  விரல்கள் இடுக்கில் வைக்கும் பேப்பர் அளவிற்கு இருக்கலாம்.  அதில் அச்சிடப்படும் வார்த்தைகளும் வரிகளும், சமந்த ப்பட்டோருக்கான சம்மதத்தை  மிதித்து அழிக்கும், உரிமைகளை வதம் செய்து அதிகார ஆணவத்தில் கூத்தடிப்பதாகவும், இருக்கவும் செய்யலாம் இருக்கக் கூடாது என்பதற்காகவும் செய்யலாம்! அரசுகளின் ஆணையில் வார்த்தைகள் பதமாய் அச்சிடப்படும். அந்த அச்சுக்குள் கலந்திருக்கும் நச்சுக்களை தரம் பிரித்தால்,  அருவருப்போ அல்லது உயிர் துறப்போ இரண்டில் ஒன்று உங்கள் இதயம் தொடும்! இனி இதயங்களை பத்திரப்படுத்திக் கொள்வது கடினம்.  காரணம் அச்சுகளைக் கொண்டல்ல நச்சுகளைக் கொண்டுதான் ஆணைகள், வெளிவருவது வழக்கமானது அது காவு வாங்கும் பழக்கத்தை கண் மூடாமல் பேணுது! வேலா வேலைக்கு ஆணை ரதம் எனும் அறிக்கை வரும், பலரின் வேலை எடுக்கும் வேலையை செய்தபடியும், அதிகாரத்தின் வக்கிரமாய் நிலை பெறும், அடச்சி இதுவன்றோ புழுத்துப் போன ஜனநாயகத்தின் நிலவரம்!  பார்வை அற்றோருக்கு கொடுத்த ஒதுக்கீட்டை பறிக்கும் பம்மாத்தும் வளம...

ஒரு வேலியின் வேட்டை!

 ஒரு வேலியின்  வேட்டை! வேலிகள் விலை போய் வெகு காலம் ஆகிவிட்டது! அலங்கோலங்கள் அதிகமாகிவிட்டதே அதற்கு  சான்று. அலங்கோலங்களை இருட்டடிப்பு செய்தும் அதையே  பொற்காலம் என பிதற்றியும், தான் விலை போனதை அது மறைத்திட எத்தனிக்கிறது! அலங்கோலங்களுக்கு உற்றத் துணையாய் அநியாயங்களும் விழாக்காலம் காண்கின்றன! இது தேரோடும் விழா அல்ல உரிமைகளை கூறு போடும் விழா! மேளங்கள் கேட்பதில்லை மாறாக மிதிப்பட்ட சமத்துவத்தின் ஓலங்கள் தான் கேட்கின்றன! சுயநலம் அது பரிவட்டம் கட்ட, பிழைப்பு வாத அனுகூலம் ஒளிவட்டம் கூட்ட,, இறுமாப்புடன் இருப்பதை கெடுத்து அழிக்கும் காட்டாட்சியின் விழா! காவல் இருக்கிறேன் என்று ஆசை மொழி பேசி விட்டு,  முதுகில் குத்தும் மோசடிக்காரர்களே படி அளந்தால் என்ன ஆகும்? உரிமைகள் பறிபோகும் திறமைகள் தீக்கரையாகும்! கடமைகள் கை கழுவப்பட கொடுமைகள் கையளிக்கப்படும்! ஏழ்மையை துட்சமென  மதித்து தனிப்பட்ட செழுமைக்கு சாமரம் வீசப்படும்! சமத்துவ நேர்மையை நிர்மூலமாக்கி ஏற்றத்தாழ்வு வன்மங்கள் வளர்த்தெடுக்கப்படும்! நன்மைகள் விளைந்திடும் இளையோரின் கல்வியை ஊழல் பொய்மைகள்  பெருகிடும் ஊழலின் வசம்...

வளைக்கப்படும் வளாகங்களும் விதிகளும்!

 வளைக்கப்படும் வளாகங்களும் விதிகளும்! நீங்கள் நான் என்கிற சாதாரணத்திற்கு அது சாத்தியம் இல்லை.  முட்டி முயன்றாலும் சாதாரணங்களுக்கு எதையும் சாத்தியப்படுத்தும் சாதகம் இன்று இல்லை! பாதகங்கள் கூர்மைப்பட்டு பாதங்களுக்கு கீழ் பள்ளமே  பறித்தாலும், ராட்சத வெள்ளம் ஆளும் அணைக்கட்டே  கைவிட்டிட அழித்தாலும், ஒழுங்கிட்ட விதிகள் வழங்கிட்ட கணவான்களினாலேயே மழுங்கிட்டு போனாலும், சங்கங்களாய் பிரிந்து உறங்கிட்ட வேளையில், அடிமை விலங்கிட்டு கல்வி அதிகாரம் எவன் வீட்டு சொத்தாய் ஆனாலும், ஆசிரிய சாதாரணங்களால் பொற்கால அரசின் வேதகணங்களை அசைத்திடவே முடியாது! அசைத்திட  வேண்டிய அத்தனை பலத்தையும், மொத்தமாய் அளவிட்டு அங்குலம் அங்குலமாய், பிளவிட்டு உலை வைத்தார்களே ஐயோ அந்த, ஆளும் கலையில் கரைக்கண்டு சில மலை  உண்ட மாதவன்கள்! இன்று அவர்கள் கொண்டு வந்திருக்கும் நிலையோ, பெரும் விலை கேட்கும் கொலைபாதகம்  கொண்டது! அது உயிர் எடுக்க முடிவெடுத்துவிட்டது கத்தியால் அல்ல புத்தியால்!  அதன் புத்திக்குள் பொதிந்திருப்பது தான் ஐயா விஷக்கத்தி! அது தாக்கி நம்மை வீழ்த்த  தலை  படுகிறது என்பது, ...

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!

 தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா! அவரின் நகர்வலம் இல்லா வலைதளம் கிடையாது!  ஒய்யார குதிரையில் நகர்ந்து ஒரு அங்குலத்தையும் அவர் விட்டதில்லை.  விரட்டும் குதிரையை மிரட்டும் சாட்டைக்கு சமூக நீதி என்று பெயர்.  குதிரை அனுமதிக்காமல் அந்த சாட்டையும் இந்த ராஜாவும், ஒரு வேட்டைக்கும் போவதில்லை எந்த கோட்டையும் தாண்டுவதில்லை! அவர் பொதுவாக வேட்டையாடுவது விளிம்பு நிலை உரிமைகளை தான்! அந்தக் கோட்டினை  தாண்டுவது ஓட்டினால் வரும் வேட்டின் நினைவால் தான்! சொல்லப்பட்ட விளிம்பு நிலையும்  அதன் ஓட்டும், அதிகார ராஜாவின் அங்கத்தை அதிகாரப்படுத்தும் இரண்டு கண்கள்! மறக்க வேண்டாம் அந்த குதிரையின் கண் அசைவிற்கு, அதிகாரத்தில் கண்களே அடங்கும் அந்த சமூக நீதி சாட்டையும் சத்தம் இன்றி இணங்கும்! அவரின்  பாதப்படாமல் இந்த குதிரை பார்த்துக் கொள்வதே  தான் சேதப்படாமல் இருக்கத்தான்! அந்த நான்கு கால் பல்லக்கு வெளிச்சப்பட்டு, எல்லோரையும் நம்ப வைத்த விடியலை இருளாக்கியதே கல்வியின் காரிருளுக்கு காரணம்! ஆனால் அந்த காரிருளோ  குறிப்பிட்ட இந்தக் காரியக்கார குதிரைக்கு, வணிக அட்சய பாத்திரத்தை பரி...