வல்லரசின் வெறியாட்டம்!

 வல்லரசின் வெறியாட்டம்!


இதன் ஆட்டத்தை அளவிட அணுவுலை தேவை,


மற்றவரின் நலன் என்பது இது போர்த்திய போர்வை!


அரசியலாய் அறச் செயலற்று ஆடுதல் இதன் கலை,


அதற்காய் எவர் தலைக்கும் வைத்திடும் விலை!


தான் என்னும் அணுக்களை நிறைத்து போடும் ஆட்டம்,


தனக்கே எல்லாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும்!


அழிவே இதன் உடம்பை வளர்க்கும் உணவு, 


பிற நாட்டு நுழைவே வற்றிடா அன்றாட கனவு!


ஏழை உற்பத்தி செய்யும் பண திமிர் தொழில்சாலையே இதன் கட்டமைப்பு,


இதற்க்கு முதுகெலும்பு அற்று ஒத்தூதினால் அதுவே கூட்டமைப்பு!


அறிவிப்பின்றி அரசுகள் மீது குண்டு வீசும்,


அது பராக்கிரமம் என்று இதன் கொத்தடிமைகள் கூச்சமின்றி பேசும்!


ம்மனித உயிர்கள் இதற்க்கு பொருட்டல்ல,


வெள்ளை மாளிகை செய்தால் எதுவும் திருட்டள்ள!


நாடுகளும் ஏடுகளும் இதற்கு அடிமை,


உலகத்து உடைமைகளை சுரண்டுவதே இதற்க்கு பெருமை!


தன் நாட்டின்மேல் பட்டுவிடக் கூடாது சிறு கீறல்,


அதற்க்கு தான் பொழிகிறது இதர தேசங்களின் மேல் ஆயுத தூறல்!


இது போட்டிடும் கணக்குகள் என்றுமே மலிவு,


இதர நாடுகள் எல்லாம் இதன் வளர்ச்சியை சுமக்கும் இழிவு!


தன் தேசத்திற்கு சுகாதார சட்டதிட்டம்,


மற்ற நாடுகளில் இதன் கழிவுகளால் மூச்சு முட்டும்! 


இதன் கால்களை ஆட்டி வைப்பது சில விஷம தலைகள்,


அதன் சலங்கையாய் செயல்படும் தந்திர ராணுவ நிலைகள்!


எந்த நிலத்தையும் விடாது இதன் அப்டோபஸ் கரங்கள்,


அதற்காய் எப்படிஊம் மாறும் இதன் சுரண்டலின் நிறங்கள்!


தான் சொல்வதே சரி என உரைத்தால் தேசங்கள் பிழைக்கலாம்,


மறுக்கும் பிற மண்ணின் தலைவர்களை இது குண்டு வீசி இஷ்டம்போல் அழிக்கலாம்!


உலகமே இதன் செழுமைக்கான வரைபடம்,


இல்லை என்று இறையாண்மை பேசினால் இதன் ஏவுகணைகள் அதை முடித்திடும்!


தரகும் தனியாரும் இதன் தலைவனுக்கு இரண்டு கண்கள்,


அதற்காய் போர் த்தொடுக்க மாண்டிடும் உயிர்களோ அவனுக்கு வெறும் எண்கள்!


தன் தேசம் கோடிகளில் புரண்டிட வேண்டும்,


அதற்க்கு எந்த தொப்புள் கொடிகளையும் அதன் ஆதிக்க திமிர் தீண்டும்!



ஒப்புக்கொள்ளுங்கள் இதன் அகந்தைகளும் அடடே மிகச் சரி,


இல்லையென்றால் அங்கிருந்தே போடப்படும் உங்களின் இளநிருக்கும் சிறுநீருக்கும் வரி!


இவனால் நடக்கும் போர்களுக்கு பெண்களே இலக்கு,

இன அழிப்பு செய்யும் இவனை மானுடத்தை ஒன்றிணைத்து எடுக்க வேண்டும் சுளுக்கு!


இவன்,

முனைவர். உ. மகேந்திரன்!

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!