அவர்கள் வெல்லட்டும்:
அவர்கள் வெல்லட்டும்:
மாண்புகள் தோற்று மரபுகள் காற்றில் பறந்தால் என்ன அவர்கள் வெல்லட்டும்!
சத்தியத்தின் நாமம் சாகட்டும் சத்தியபாமா வெல்லட்டும்!
மதுராந்தகம் அவர்கள் வசம்போகட்டும் ஜனநாயகம் நாசமாகட்டும் அனுதினமும் அது நடக்க அவர்களே வெல்லட்டும்!
எந்திரப் பெட்டி வைத்து இங்கிதமாய் வெல்லட்டும்!
ஓட்டுக்கு வேட்டுவைத்து ஞானேஸ் உடன் கூட்டு வைத்து நயவஞ்சகமாக வெல்லட்டும்!
புதிய மொந்தையில் பழைய கல் அதற்கென்ன பருகி பரவசமடைய அவர்களே வெல்லட்டும்!
சம்சாரமோ பிரச்சாரமோ ஆசாரம் எதிலும் இல்லை இருந்தாலும் வெல்லட்டும்!
கம்யூனிசமும் ஃபெமினிசமும் கரைய ஹீரோயிசம் நாட்டுக்கு தேவை ஆதலால் வெல்லட்டும்!
ஆதவ புரட்டும் நிர்மலின் உறுமலும் உரைக்கவில்லை எவருக்கும் அதனால் வெல்லட்டும்!
அப்புறப்படுத்த ஒதுக்குப்புற குடிசைகள் காத்திருக்கின்றன அவர்களுக்கு அதனால் வெல்லட்டும்!
அண்ணலும் பார்க்க அன்னியும் பார்க்க பட்டினப்பாக்கத்தில் சட்டத்தின் மன்றங்கள் தேவை அதனால் மன்மதமாக வெல்லட்டும்!
வெயிலில் காய்ந்த தளபதியின் வியர்வைக்கு விருது வேண்டும் அதனால் வெட்கமே விக்கித்துப் போக வெல்லட்டும்!
வாக்காளர் திருத்தத்திற்கு வாய்க்கரிசி போட வேண்டும் அதனால் வெல்லட்டும்!
டெல்லி ஜந்தரே கொதிக்க தமிழ் மாந்தரெல்லாம் தவிக்க மகா புருஷரின் பட்டாபிஷேகம் பாதுகாக்கப்பட வேண்டும் அதனால் வெல்லட்டும்!
இவர்களின் ஏவல்காரர்களுக்கு சாவு மணி அடிக்கும் சமுத்திர புரட்சி திசைப் புரள வேண்டும் அதனால் வெல்லட்டும்!
இவர்களே எதிர்காலம் என்னும் மரண ஓலம் திசைகளை தீக்கரையாக்க இவர்கள் வெல்லட்டும்!
தாய்மாமன் சீரும் வெற்றிப் பயண ஜோறும் ஊரையே உயர்த்தி நிமிர்த்த போகுது அதனால் வெல்லட்டும்!
விளிம்பில் விழுந்தோறும் திறனாளி என்று திவ்ய பட்டோரூம் வெளிச்சம் தர இவர்கள் அடிச்சு பிடிச்சு வெல்லட்டும்!
இனி யாரும் அரசு வேலை பெற முடியாது எனும் தனியார் பெருகிட தற் குறியுடன் வெறிபிடித்து வெல்லட்டும்!
பல அடுக்கு காவல் போட்டு ஆறு மணிக்குள் படுத்து உறங்க வேண்டியதிருக்கிறது அதனால் வெல்லட்டும்!
தோழியை அழைத்துக்கொண்டு தொழில் முதலீடு செய்ய அயல்நாடு போக வேண்டியது இருக்கிறது அதனால் வெல்லட்டும்!
நம்பிய கூட்டத்திற்கு கம்பி நீட்டும் அரசியல் வம்பு செய்ய வேண்டியது இருக்கிறது அதனால் வெல்லட்டும்!
பாட்டுப் போட்டி நடத்தி சட்டங்களை திருத்த வேண்டியது இருக்கிறது எனவே தீயாக வெல்லட்டும்!
டெல்லிக்கு சலாம் போட கிள்ளியின் கரங்கள் பலப்பட வேண்டும் அல்லவா அதனால் பயப்படாமல் வெல்லட்டும்!
பாதங்கள் நோக நின்று ஊடகங்கள் சந்தித்து வாதங்கள் செய்ய வேண்டும் அதனால் இந்த வசீகரன் வெல்லட்டும்!
எந்திரப்பட்டு இருக்கும் வரை நாயக மந்திரமே மகுடம் சூடும் அதனால் வெல்லட்டும்!
போதைப் பெருக புதிய பாதை வகுக்கும் புதிய கீதை காரன் புறப்பட்டான் அதனால் வெல்லட்டும்!
மாறுவேடத்தில் மங்கைகள் சென்று மானத்தை காத்திடும் ஆணை போட அடடா இவர்கள் வெல்லட்டும்!
திராவிடக் குறை கூறி பொறுப்புகள் மடைமாறி சாணக்கியர் கடை போடவேண்டும் அதனால் வெல்லட்டும்!
மத்திய அருளாலும் சாகச விரலாலும் அறிவில் உயர்ந்த நிலத்தை அறிவால் நிறைந்த இடமாக மாற்ற இவர்களே வெல்லட்டும்!
இவன்,
கவிஞர் வெங்கோலன்!
அருமை அருமை
ReplyDelete