மவுனித்த மானியம்:
மவுனித்த மானியம்:
எத்துரையின் வித்தகராம்.
அத்துரையும் கொண்டவராம்.
நித்திரையின் நாயகராம்.
உத்தரவு உதட்டில் நின்று ஊனத்தோரை உதறியவராம்!
சித்திரையில் நடைபழகி சிம்மாசனம் சேர்ந்தவராம்!
அங்கங்களின் அழகினால் ஆர்ப்பரிக்க வென்றவராம்!
இதற்காக கட்சி கண்டு,
அதற்காக சுற்றி வந்து,
எதற்காகவும் அஞ்சிடாமல்,
குதர்க்க கதை உரைத்து,
குழந்தை விரல் பிடித்து கோட்டை ஏறிய,
கோட் சூட் கதர் போட்ட கந்தகராம்!
துறை பேசாத் தூயவராம் ,
குறையாவும் கரைந்தோடும்,
சொல் உரையாவும் இணக்கம் வழிந்தோடும்,
நயன்த நிர்வாகம் பயின்றவராம்!
உடல் ஊனம் கொண்டவருக்காய்,
கடல் பார்க்க முதல்வர் கடை போடும் சேவக காவலராம்!
தோஸ்தான வாஸ்து சொல்ல,
ஆஸ்த்தான வஸ்தினாள் அதிகாரம் வெல்ல,
விழித்திரனற்ற விளிம்பினோர் நெருங்கிடாமல்,
பத்தாவதுக்குள் பதுங்க போகும்,
பாமர துயருக்குள் பங்கெடுக்கும் பணிந்தவராம்!
அவ்வைய்ந்தாண்டை அங்குலமாய் பிளந்தரிந்து,
தன் காலத்தில் குறை கலைந்து,
உடல் நலிந்த வரியவருக்கு வாழ்வளிக்க வந்தவராம்!
ஏட்டுச் சுரக்காய் என்றறிந்த ஒன்றைக் கூட,
பிறந்த கூட்டுக்குள்ளே குமுறிக் கிடக்கும் குறைபாடு கொண்டோருக்காய்,
மன்றத்தில் கூடியோர் முன் மறந்தும் வாசித்திடா
ஐயோ! அற்பமாய் அப்புகழை ஈட்டிட குழைந்தும் படித்திடா குணசீலராம்!
பாவத்தின் பழி சுமக்கும் உடலோரின்,
புனித அமைச்சராய் பொறுப்பேற்று,
மறந்தும் மனிதராய் மானியத்தை வெளியிடா கலை உலகத்து வேந்தராம்!
உள்ளத்து காயங்களால் உடல் சேரும் வலிப்போக்க,
உரிமை திட்டங்கள் எதிர்பார்த்து காத்திருக்க,
மாற்றுக் கரங்களில் வாசிக்க ஒப்படைத்து,
மாற்றுத்திறனோரை அனாதை ஆக்கிய அதிகார ஆண்டவராம்!
இவன்,
முனைவர். உ. மகேந்திரன்.
மாற்றுத்திறனாளர் துறை அமைச்சராக இருந்து மானிய கோரிக்கையை படிக்காத தமிழகத்தின் முதல்வருக்கு இக்கண்டனக் கவிதை சமர்ப்பணம்!
Comments
Post a Comment