கண் மூடியதே கம்யுனிசம்!
கண்
மூடியதே கம்யுனிசம்!
நூற்றாண்டு
துவளாமை ஒன்று துவண்டுபோய் சாய்ந்தது!
தோள்கள்
இரண்டில் குறிக்கோள்கள் சுமந்த,
புரச்சி
வால் ஒன்று போதும் எனச் சரிந்தது!
கால்
கொண்டு மண்ணளந்த மனிதம் தன் உடல் விட்டு பிரிந்தது!
நூல்
படித்த சுரணை நூலகம்,
நாள்
பொழுதும் தோழமை பால் கொடுத்த கருணை தாயகம்,
வானுலகம்
விரைந்தது!
சொல்
அதிலும் எளிமை சேர்த்த அரசியல் ஏழ்மை,
ஆடம்பரம்
அருவெறுத்த தாழ்மையின் தலைமை,
வியர்வையே
சம்பளம் என்று பெற்ற சான்றாண்மை,
வகைபடுத்தி
போராட வகுப்பெடுத்த பேராண்மை,
கடைசி கண்ணிமைதனை சேர்த்தது!
எடுத்த
செயல் முடித்த எளிமை ஏவுகணை தனை,
வெள்ளையனையும்
கொள்ளையனையும் தோல் உரித்த வயோதிக நாயகனை,
மண்
சுரண்டி கெடுத்தவனையும்,
பிறர்
வதைபட பார்த்து துள்ளி குதித்தவனையும்,
துள்ளித்
திமிறி எதிர்த்த தூயத் தலைமகனை,
இறுதி மாலைகள்
எடுத்து சூடிக்கொண்டது!
கோடிகளையும்
லச்சங்களையும் அச்சம்கொள்ள செய்த கக்கனின் மிச்சம்,
ஜெயில்
கம்பிகளையும் அதிகார அம்புகளையும் கூச்சம் கொள்ள செய்த நேதாஜியின் சொச்சம்,
வதைக்கும்
சாதியத்தை கொதிக்கும் சினத்துடன் முறைத்த அயோத்திதாசரின் எச்சம்,
தன்
உடலை துச்சமென உதறி பிரிந்தது!
தமிழ்
நிலமும் நலிந்தோர் உள்ளமும்,
காத்திர
போராட்ட களமும்,
கார்பரேட்
கண்ணிவைத்து காத்திருக்கும் இயற்க்கை வளமும்,
சலம் சலமாய்
கண்ணீர் வடித்திட விருப்பமின்றி விடைபெற்று விரைந்தது!
இரண்டு
வேட்டி கொண்டு சிறிய கூட்டில் நின்று,
இந்த
கொடிய நாட்டில் வாழ்ந்த,
தியாக
செங்கொடி மரண தேவதையின் மடி சாய்ந்தது!
சமரசம்
செய்திடா அடித்தட்டு வர்க்க நேசம்,
பரவசமாய்
பதைவிகளை அனுகிடா சத்திய சுதேசம்,
தேசத்தை
அயலானுக்கு விளைபெசுவதை வெருத்திட்ட மார்க்சிய ஆவேசம்,
வறியவர்களின்
உரிமைகளுக்காய் சீரிய பாமர பாசம்
ஆறுகளை
அதிர்ந்து முழங்கி காத்திட்ட கம்பீர ஆக்ரோஷம் ,
போனதையா
போதுமென்று அற்ப மானுடனின் சகவாசம்!
தியும்
தீண்டாமல் மண்ணுக்குள்ளும் அண்டாமல்,
விரகிற்கும்க்
சருகிற்க்கும் செத்தபின்னும் விலை போகாமல்,
மாண்டும்
பாடமெடுக்க, வேண்டாம் இந்த உடலும் என்னும் எளிய வேதம் கொடுக்க,
மறைந்த
மருத்துவ கூடத்தில் கொடை ஆகி கரைந்தார்,
ஐயோ!
பாட்டாளிகளின் இதையங்களுக்குள் இடி இறக்கி அல்லவா விரைந்தார்!
ஐயா
நல்லக்கண்ணு அவர்களின் பொற்பாதங்களில் கண்ணிற் அஞ்சலியை சமர்ப்பிக்கும் இவன்,
முனைவர், உ. மகேந்திரன்!
Comments
Post a Comment