வாழ்க்கைக்குப் பெயர் சமுத்திரமோ!
வாழ்க்கைக்கு பெயர் சமுத்திரமோ,
முயன்று வாழ்வதால் ஏதும் துயர் வருமோ,
ஒற்றுமையில் ஏதும் கறைப்படுமோ,
உணர்ந்ததை செய்தால் பெயர் கெடுமோ,
குழுவில் குழப்பம் விளைந்திடுமோ,
என் நட்பு உறவை உங்களின் இதயங்கள் தவிர்த்திடுமோ,
நிலைப்பாட்டை நிந்தித்தாள் ஜனநாயகம் தழைத்திடுமோ,
வெல்லுதலில் அல்ல அன்பு கொள்ளுதலே உயர்ந்தது என்பதனை உறவுகள் மறுத்திடுமோ,
அக்கால பெரியவர் சிறியவர் பிழைதனை முக்காலம் அறிந்த இக்கால நட்புகள் விளங்கிடுமோ,
விளங்கியபின் முழங்கியது நம் ஒற்றுமை தான் என்றபின் தனித்த முடிவிற்கு அவை விலங்கு இடுமோ!
உங்களின் கரங்களும் எனது தோள்களும் சமம் என்பதை புன்னகை முன்னிறுத்தும் சான்றான்மைகள் உடைத்திடுமோ,
உரிமைகள் தனித்தவை என்பதனை படித்த பண்புகள் அனைத்திடுமோ,
அனைவரும் என்பது இனிவரும் தனித்துவங்களை வாரி அனைத்து செழித்திடுமோ,
தரவுகளை தள்ளி வைத்து ஆதரவை தந்துவிட தங்க குணம் கொண்டவைகள் யோசிக்குமோ,
அர்த்தமற்ற அழுத்தங்களை சுற்றம் கொண்ட தொழில் மேதகு சொந்தங்கள் இறுகப் பிடித்திடுமோ,
எவை வந்தாலும் நாம் எல்லோரும் ஈரேழு முத்து மணி கோவைகள் என்பதனை ரத்தமதில் மாண்பு கொண்ட கால் நடக்கும் தோழமை பண்புகள் அங்கீகரிக்க சிந்தித்திடுமோ!
வீரமோ தீரமோ ,
உழைப்பின் சாரமோ,
யார் என சொல்ல வந்தது இந்த நேரமோ,
ஒன்றுபடுதல் தவமோ,
அதன்படி நின்று விடுதல் வரமோ,
இந்த அடியேனின் சொல்லும் உங்களின் உள்ளமெனும் மோகன ரதத்தில் ஏறாமல் விடுமோ!
நன்றி. ☺️🥵🥵🥵👍🙏🙏🙏😊
Comments
Post a Comment