அவர்களுக்குத்தான் அனைத்தும் அத்துபடி!
அவர்களுக்குத்தான் அனைத்தும் அத்துபடி!
அவர்கள் அறியாதது என்று அனேகமாய் இருக்க முடியாது.
அதிகாரம் செய்ய மதிபாரம் ஏற்றிப் பிழைக்கும் மரபினர் இவர்!
மது சொட்டும் சொற்களை முதுகு வெட்டும் நுண்கலை,
தேர்ந்தெடுக்க பட்டவன் சார்ந்திருக்கும் சலுகை பட்ட எண்களை,
சனங்களை கணிப்பொறிக்குள் சங்கேதப்படுத்தி,
மேதமை என மாறுதட்டும் அவர்களின் அறிவு புஜங்களை,
சத்திய நிஜங்களை மாற்றிப்போட்டு சத்தமாய் உரிமைகளை கூறு போட்டு ,
செருக்குடன் தழைத்திடும் அவர்களின் விசுவாச நிறங்களை,
போராடி முச்சந்திக்கு எவன் வந்தாலும் பச்சோந்தியாய் இருக்கும்,
அவர்களின் பராக்கிரம அதிகார குணங்களை,
உயர் பொறுப்பில் நிலைத்திட செய்யும் அவர்களின் அண்டிப் பிழைப்பு சிணுங்களை,
சங்க வெள்ளாவியில் போட்டு வெளுத்தாலும்,
கரை திருத்தவோ நேர்மையின் சிறைபடுத்தவோ அவ்வளவு எளிதில் இயலாது!
உரிமை கோப்புகளை குப்பைப்படுத்தும்,
அவர்களின் தான்தோன்றி த்தனமான தீர்ப்புகளை,
ஓட்டு பெற்றவனுடன் கூட்டு வைத்து,
அவன் காதில் விளிம்பு நிலை வேட்கைகளை பொய்படுத்தி போட்டு வைத்து,
வைத்ததால் புண் படுவது கண் காண முடியாத தன்மானத்தினர்,
என்பதை நன்கறிந்தும் அரசு எந்திரமாய் புண்படுத்தும்,
நில்லாத அவர்களின் பொல்லாத தடங்களை,
பல மடங்கென திரண்டு மோதாமல் முறித்திட வழி ஏது?
அதிகார பக்தியும் அதில் முறுக்கேறிய புத்தியும்,
கரைவேட்டி தலைவனுக்கு துறை அமர்ந்து மிரட்டி,
யுத்திகள் வகுத்து போராடும் சக்திகளின் பேசுபொருள் சுருட்டி,
மனுவைத்து கேட்கும் மாண்புடன் திரள்போரை விரட்டி,
ஆணை பட்ட கீழமை மேலமை சட்டச் சொற்களை கேவலமாய் புரட்டி,
கூச்சமின்றி சலுகை சூழ பதவி மரம் தாவிட,
எல்லை எதுவாயினும் செல்ல தயங்காத ,
கல் அதில் உள்ளம் செய்த கற்றறிந்த,
அதில் எளிமையை முற்றும் துறந்த தான் என்பதை நிரம்பப் பெற்றோரை,
துரப்பது உயிரே எனினும் தோலுரிக்காமல் மக்களுக்காய் மடைமாற்ற முடியாது!
தரவுகளை கலைத்துப் போட்டு,
நாற்காலி உறவில் நங்கூரமிட்டிட,
கெட்ட பெயர் கேடு கெட்டவனுக்கு வந்து விடக்கூடாது என்று,
நொந்து போய் பேச வருவோரையும் பந்தென எத்திவிடும்,
கத்தியென சொற்களை வீசி உரிமைகளை ரத்தம் சொட்ட குத்தி விடும்,
சித்து வேலை புத்தியோரை,
வந்துவிடும் பங்கம் என விலகாமல் சிங்கமெனக் கூடி மோதாமல்,
தரைதட்ட தங்கிவிடும் சம நீதி குறுத்தை,
பொங்கி எழ செய்திட வழி ஏதும் கிடையாது!
இவன்.
கவிஞர்.
வெண்கோலன்!
வணக்கம் மகேந்திரன் நான் பெரியதுரை.
ReplyDeleteவார்த்தைகளில் அமிலம் ஏந்தி நமக்கு துரோகம் இழைக்கும் ஆதிக்க சக்தியை சிறிதும் அச்சமின்றி எதிர் கொண்டிருக்கிறீர்கள்.