அந்த குழந்தைகளின் இறுதி மூச்சு!

 அந்தக் குழந்தைகளின் இறுதி மூச்சு! 


எனக்கு ஒன்றும் கல் மனசு இல்லை. 


நான் இரக்கமில்லா சூறாவளியோ அச்சுறுத்தும் புயலோ அல்ல. 


என்னைப்போல் சுரண்டப்பட்டவர் ஒருவரும் இருக்க முடியாது!


உபரியாய் இருந்த நான் அபரிவிதமாய் சுரண்டப்பட்டு சுருங்கி கிடக்கிறேன். 


என்னை அழித்து பிழைக்கிறார்கள் ஆனால் பிழைப்பவர்களை அழிக்க நான் நினைப்பதில்லை! 


அதிலும் குழந்தைகள் என்றால் நான் தென்றலாகி விடுவேன். 


அவர்களை விட்டு விலகும் படி மூச்சடைக்க செய்தால் வாடிப்போகும் வாடை காற்றாகி போவேன்!


அந்தக் குழந்தைகளிடமிருந்து  என்னைப் பெயர்த்து எடுத்த போது,


உயிர் உறிஞ்சி எடுக்கப்பட்ட அனல் காற்றைப் போல அவதையுற்றேன்!


நான் பிரிக்கப்படுவது பொறுக்க முடியாமல் அவர்கள் துடித்த போது,


ஐயோ! என்னுள் இருந்த ஈரப்பதம் பிரபஞ்சமே அலறிட ஓலமிட்டது!


காற்றின் கழுத்தை நெரித்த அந்த கணத்தின் வலி அந்த கயவர்களுக்கு எப்படி தெரியும்?


குழந்தை அரசியல் செய்பவர்களுக்கு குழந்தைகளை வைத்து செய்யப்படும் அரசியல் எப்படி உரைத்திருக்கும்?


குழந்தை மொட்டுக்கள் விடும் மூச்சியில் தான் நான் உயிர் காற்றாய் உயிர் வாழ்கிறேன்! 


என்னை துரத்தி அவர்களை பறிப்பது,


நான் பறிக்கப்பட  அவர்கள் பரிதவிப்பவை அரசியல் படபிடிப்பு செய்வது, 


பிஞ்சு கலாய் மனிதன் மாண்டு கிடக்க, 


அந்த அரசியல் அழுக்கை புனிதப்படுத்த பிதற்றி திரிவது,


சுயநல சுவாசம் கொண்டிருப்பவன் செய்யும் அருவருப்பு துவேஷம் அன்றோ!


நான் வெளியேற வேண்டாம் என்று குமுறிய  குழந்தைகள் இறுதியாய் சொன்னவற்றை சொல்லவா?


காலையில் செல்லமாய் கை கலப்பில்  ஈடுபட்ட  தம்பி தங்கைகளுக்கு மன்னிப்பு முத்தமிட வேண்டும் என்னை விட்டு விடாதே என்றது ஒரு குழந்தை!


அப்பா வாங்கித் தந்த அந்த அழகு பொம்மைக்கு சட்டை தைத்து தர வேண்டும் என்னை விட்டு விலகாதே என்றது ஒரு மழலை!


அம்மாவின் மடி தூங்கி  இளைப்பாற வேண்டும் ஆகவே ஒரு பிடி மூச்சாக எனக்குள் இருந்து விடு என்று கெஞ்சியது மற்றொரு பிஞ்சு!


பாட்டியின் கைப்பிடித்து பாட்டனுக்கு தாங்க கோள் கொடுத்து,


உதவ என்னையன்றி  யாரும் இல்லை எனவே என்னை காப்பாற்று என  கூச்சலிட்டது இன்னொரு சின்னச்சாமி!


கால் பரீட்சை விடுமுறையில் அத்தை மாமா ஊருக்கு சென்று, 


ஊஞ்சல் இட்டு  ஆடிட வேண்டும் ஆகவே உயிரை நிறுத்தி விடாதே என்று அழுது ஓலமிட்டது ஒரு இரட்டைக் குடுமி!


சில ஆடுகளுக்கும் இதர கோழிகளுக்கும் உணவிட்டு கண்டு களிக்கும், 


இன்னொரு விடியல் எனக்கு கட்டாயம் வேண்டும் என மன்றாடி விண்ணப்பித்தது ஒரு ஏழை ராஜ்யத்தின் மழலை!


வெளியே வந்தால் பொம்மை கிடைக்கும் நன்மை நடக்கும், 


என்று நம்பி வந்த எனக்கு அது கை சேரும் வரை கை விடாதே என்று கை கூப்பியது ஒரு ஒரு அடி பூங்கொத்து!


அந்தக் கூச்சமற்ற கூத்தாடி மட்டும் திரையிலிருந்து அரசியல் வரை வந்த வாரிசு அல்ல,


என் குடும்பத்தின் ஒற்றை குலக்கொடி நானே ஆகவே உயிர் படி அளந்து விடு என உரக்கச் சொன்னது ஒரு மழலை பிழம்பு!


பிறந்த துவக்கத்தில் அவர்களை மாண்டு போகும் இறுதியில் ஐயோ எப்படி விடுவது? 


அவர்களின் எண்ணத்தில் இடி இறங்க,


நான் நொடி பொழுதில் மூச்சற்று போனேன்!


மூச்சுக்காற்றையே மூச்சடைக்க செய்த மூடர்களுக்கு நாட்டை ஆளும் நாற்காலி ஒரு கேடா!


மழலைகள் மண்ணில் விழ மாலைகள் விண்ணில் இருந்து வர வேண்டும் எனும் கனவு  நாயகனுக்கு,


ஏழைகளின் வாழ்க்கை என்ன படப்பிடிப்பு நடத்தும் ரோடா!


அந்த தளிர்களின் இறுதி  மூச்சாய் ஒன்றினை இறுதியாக சொல்வேன்! 


காணாமல் இருந்து நான் காண்பதை விட காணுவதாக நினைத்து நீங்கள் காண்பது,


நிஜமல்ல நிழல், இன்பமல்ல வெறும் பிம்பம், உறுதியான திட்டப்பன் அல்ல உயிரைப் பறிக்கும் எட்டப்பன்!


இவன்.


முனைவர். 


உ. மகேந்திரன்!

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆமாம் அந்த நாற்காலிகளை தெரியுமா உங்களுக்கு?

ஒரு தேன் கூடும் சில தேனீக்களும்!

தனியார் குதிரையில் ஒரு ஜனநாயக ராஜா!