இனி அப்படி யாரும் பிறக்கக் கூடாது!
இனி அப்படி யாரும் பிறக்க கூடாது! இலச்சினையும் முத்திரையும் அதற்காகவே முண்டியடித்து காத்து கிடக்கின்றன! ஆயிரம் அதிகார காகிதங்களின் மேல் அன்றாடம் மோதினாலும், ஒரு தாளின் மேல் தடம் பதிக்க தான்தோன்றி தனமாய் தவம் இருக்கின்றன! அந்த தாளின் எழுத்துக்கள் வெங்கோல் கழுத்துகளுக்கு இறுதி இறுக்கத்தை, கொடுத்து குருதியின் கொதிப்பினை வதக்கிட துடித்தபடி கண்ணிவைத்து காத்து இருக்கின்றன! அது ஒரு கனவு திட்டம் என்பதால் அல்ல, ஒரு கூட்டத்தின் கனவை கலைக்க போகும் தீய திர்மானம் ஆதலால்! இது ஒன்றும் யோசனையில் எடுத்த முடிவு அல்ல,, கண்ணின் நுனியில் அதன் வெளிச்சத்து கூச்சத்தில் கூடி எடுக்கப் பட்டது, வெளிச்சமில்லா விழிகளை தயவு தாச்சமில்லா விதஹ்த்தில், அரசானை பதத்தில் மோச்சம் தந்திடும் பாய்ச்சல் தானிது! ஐயமில்லை அதிகார வெளிச்சங்களின் ஆசியில் அப்படியே செய்ய பேசிய சூழ்ச்சி முடிச்சு வகையறாவை சேர்ந்தது! அவர்கள் இருப்பதால் பிறந்திடும் வெறுப்பினை விரட்டிட, போராடிடும் அவர்களின் குணங்களை கசக்கி சுருட்டிட, எல்லாம் அடக்கியும் அடங்கிட மருத்திடும் எஞ்சியதை தடுத்திட, உரிமை பேசி சட்டம் தூக்கிடும் சில கைகளை உடைத்திட, ச...